செவ்வாய், 20 ஜூன், 2017

மனித வளர்ச்சிக்கு மதத்தின் தேவை ! | வெற்றி

உண்ணும் உணவு, அணியும் உடை , செய்யும் தொழில் , இருக்கும் இடம் என சமூகத்தில் அனுபவிக்கும் ஒவ்வொரு ஆனந்தத்தையும் வளர்ச்சியையும் அடைய - சாதிப் பிரிவையோ , மதப் பிரிவையோ நாம் பார்ப்பது  இல்லை. 

நாம் சமைக்கும் சமையலில் ருசியினைக் கூட்ட , மற்றவரின் சமையல் குறிப்புகளை ஆராய்ந்து நமக்கு ஏற்ப மாற்றி சமைக்க நம் மனம் தயாராக தான் உள்ளது. சாதியோ , மதமோ இங்கு தடையாக இல்லை.

இவ்வாறு அனைத்திலும் , மற்ற பிரிவினரின் வாழ்க்கை முறைகளில் இருந்து , நல்ல சாராம்சத்தை எடுத்து , நம் வாழ்க்கை நலத்திற்கு பயன் படுத்தும் மன பக்குவம் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது . 

அது போல , இவர் இந்து மதத்தினர் , இவர் கிறிஸ்டியன் மதத்தினர் , இவர் முஸ்லீம் மதத்தினர் , இவர் புத்த மதத்தினர் என மனத்தால் ஒதுக்காமல் , ஒருவர் மற்ற மதத்தில் உள்ள நல்ல கருத்துக்களை தன்  வளர்ச்சிக்கு பயன் படுத்தும் எண்ணம் நம் அனைவர் உள்ளும்  வளர்ந்தால், உலகம் போரற்ற அழகான சொர்க்கமாக அல்லவா காட்சி அளிக்கும். 

ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை தன் போல் முழுதும் மாற்ற வேண்டும் என்ற எண்ணங்களை விட்டொழித்து, தன் பிரிவுதான் மற்ற பிரிவினரை விட உயர்வு என்ற எண்ணங்களையும் விட்டொழித்து , நம் எண்ணங்களை மற்ற பிரிவினரின், மதத்தின் நல்ல சாராம்சத்தை எடுத்து பயன்படுத்தும் பக்குவத்தை அடைய பழக்குவோம். கூட்டாக மனித குல வளர்ச்சியை எட்டுவோம்.

இதோ சுவாமி விவேகானந்தரின் உரையின் ஒரு சுருக்கம் உங்கள் பார்வைக்கு : 

"ஒரு விதையை பூமியில் போட்டுவிட்டோம். மண்ணும், தண்ணீரும், காற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டு விட்டது. இந்த விதையானது மண்ணாகவோ, காற்றாகவோ, தண்ணீராகவோ  மாறி விடுமா? இல்லை. விதை ஒரு செடியாக மாறி விடும். விதை அதன் வளர்ச்சி விதிக்கு உட்பட்டு வளர்கிறது. மண்ணும், காற்றும், தண்ணீரும் செடியின் வாழ்வாதாரமாக மாறி , செடியினுள் வளர்கிறது. 


மனிதனின் வளர்ச்சியில் மதத்தின் பங்கு - சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு 


இதையே மதத்திற்கு கருதும் பொழுது, இந்து, கிறிஸ்டின், புத்த மதத்தினர் . கிறிஸ்டின் இந்துவாக மாற முடியாது. புத்த மதத்தினர் இந்துவாகவோ , கிறிஸ்டின் ஆகவோ மாற முடியாது. 

ஆனால், ஒருவர் மற்றோருவரின் மனிதத்துவத்தை எடுத்துக் கொண்டு, மற்றும் தன் தனித்துவத்தையும் பாதுகாத்து, அவரின் சுய விதிக்கு உட்பட்டு வளர வேண்டும்."வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக