வியாழன், 15 ஜூன், 2017

பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளில் ஒன்று ! | வெற்றி

வாழ்க்கை போராட்டத்தில் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பிரச்சனைகள் வரும் பொழுது, அதற்கான தீர்வுகளும் தொடர்ந்து தான் வரும். தீர்வுகளை எளிதாக எட்டுவதற்கான வழி முறைகளில் ஒன்று தான் பிரித்து பார்த்து தீர்வை எட்டும் முறை.

எந்த ஒரு பிரச்சனையும் பல பகுதிகளை கொண்டதாக இருக்கும். பிரச்சனையின் அனைத்து பகுதிகளும் ஒரே பார்வையின் பார்த்து தீர்வு எட்டாமல் திணருவதை விட, முதலில் அதனை பகுதி பகுதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒவ்வொரு பகுதியாக எடுத்து ஆய்வு செய்து , பிரச்சனை இல்லாத பகுதியை தனியாக எடுத்து வைத்து விட்டால், எந்த பகுதியில் பிரச்சனை உருவானது என்பதனை சரியாக கவனித்து , தீர்வை அணுகலாம். பிரச்சனை உருவான இடத்தில் தான் தீர்வும் இருக்கும்.

மற்றொன்று ,  ஒரே பகுதியாக பெரிதாக பார்ப்பதுவே ஒரு பிரச்சனையாக உருவாகலாம்.  உதாரணத்திற்கு, 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


நீங்கள் மல்லிகை கடை வைத்து உள்ளீர்கள். ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்கள் வந்து விட்டனர். அனைவரையும் எப்படி ஒரே நேரத்தில் சமாளிப்பது என மிரண்டால், மிகப் பெரிய பிரச்சனை தான். அவர்களை பகுதி பகுதியாக பிரித்து நிற்க வைத்து, ஒரு பகுதி வாடிக்கையாளர்களின் மேல் மட்டும் ஒரு சமயத்தில் கவனத்தை வைத்து சேவை புரிந்தீர்கள் எனில், ஒரு கால கட்டத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கான சேவைகளும் முடிந்து இருக்கும். 

தீர்வு என்பது எளிதாக அமையும், பிரச்சனைகள் சரியாக வரையறுக்கப் பட்டால்.

தமிழ் பொன்மொழிகள்:
வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக