புதன், 7 ஜூன், 2017

மீன் குட்டிக்கு நீந்த சொல்லி தர வேண்டுமா? | வெற்றி

மீன் குட்டி என்றும் தன் தாயிடம் நீந்த கற்று தர சொல்லி கேட்பதில்லை. தானே நீந்தும் . தன் பிரச்சனைகளில் இருந்து தானே வெளியே வர, மனிதன் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டு உள்ளான்  .

உத்தமன்  ஒரு அடர்ந்த காட்டு வெளியில், வேலை முடித்து விட்டு , வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தான். 

அப்பொழுது, துரதிஷ்ட வசமாக ஒரு புலி அவனை வேகமாக துரத்திக் கொண்டு வந்தது. அதனைக் கண்டு, பயத்தில் நடுங்கி வேகமாக ஓடினான். ஒரு கட்டத்தில் , ஓட இயலாமல்  அவசர அவசரமாக ஒரு மரத்தின் மேல் வேகமாக ஏறினான். புலி விடும் பாடு இல்லை . அவன் இறங்குவான் என அங்கேயே அமர்ந்து விட்டது. 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      
செல் போன் கூட அவனிடம் இல்லை. எத்தனை காலம் அங்கேயே அமர்ந்து இருக்க இயலும்? ஆனால், புலிக்கோ மிக்க பசி. உத்தமன் யோசித்தான். புலி பசியாக இருப்பதால் தான் , அந்த இடத்தை விட்டு நகராமல் உள்ளது. எனவே , வேண்டிய உணவு கிடைத்தால் , புலி நகர்ந்து விடும் என்று யோசித்தான். 

வேலை முடித்து விட்டு , நாளை நடைப் பெறும் திரு விழாவுக்காக , 5 கிலோ ஆட்டு கறியை கடைக்கு சென்று வாங்கியது அவன் நினைவிற்கு வந்தது. கைப் பையில் இருந்து கறியை எடுத்து புலியை நோக்கி வீசினான். புலியும் அதனை உண்டு விட்டு சென்று விட்டது. இவனும் தன் ஊருக்கு கிளம்பி விட்டான்.

புலியானது இவனை விட ஆற்றல் மிக்கது தான். உள்ளார்ந்த அன்னிச்சை ஆற்றல் அவனை காத்தது. அது போலவே, வேறு வழி இல்லை , தப்பித்தாக வேண்டும், என்ற சூழ் நிலை வரும் பொழுது, நம்முள் உள்ள ஆற்றலே நம்மை பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்து வாழ வைக்கும்.  

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக