வெள்ளி, 30 ஜூன், 2017

கற்பனையில் நினைத்தது எல்லாம் நிஜமாக தோன்றுதிங்கே ! | வெற்றி

மனதில் பல எண்ண ஓட்டங்கள். நிஜமாக நிகழ்ந்தது பாதி, நிஜமாக நிகழ்ந்து விடுமோ என பயந்தது பாதி . உண்மையில் நிகழுமா என தெரிய வில்லை. நிகழ்ந்து விடுமோ என்ற எண்ணம் தான். மீண்டும் மீண்டும் நினைப்பதனால் , நிகழாமலேயே, நிகழ்ந்து விட்டதே. நிகழ்ந்தது என்னவோ மனதில் மட்டும் தான். 


பல விஷயங்கள் இப்படித்தான் நம் வாழ்வில். நிகழ்ந்து விடுமோ என்ற பயம். எத்தனை நாட்கள் இந்த போராட்டம். முற்று புள்ளி எப்பொழுது. எண்ணத்தில் மாறுதல் வரும் பொழுது,  தானாக அனைத்தும் மாறும்.

எண்ணத்தில் கற்பனை  கொண்டவருக்கு அல்லவா இந்த நிலைமை. இந்த எண்ணத்தை , பயத்தை ஏற்படுத்தும் இந்த எண்ணத்தை, எவ்வாறு அழிப்பது. அழிப்பது இயற்கைக்கு மாறிய செயல். எண்ண நிலையில் மாற்றம் தான் இயற்கைக்கு உட்பட்டது.

மாத்தி யோசிப்போம்.  அனைத்து நிகழ்ந்து விடுமோ என்ற பய எண்ணங்களையும், நல்லவை நடக்கும் கற்பனையாக மாத்தி யோசிப்போம் . பயத்திற்கு பதிலாக, மகிழ்ச்சி கிடைத்து விட்டு போகட்டுமே. 

நிகழாமலேயே நிகழ்ந்து விட்ட பயத்திற்கு மாற்றாக, மகிழ்ச்சி நிகழ்ந்து விட்டு போகட்டுமே . சரி தானே ?  மனதிற்கு தெம்பு தானே. அது தானே வேண்டும் வாழ்க்கைக்கு.வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக