ஞாயிறு, 18 ஜூன், 2017

மனோதைரியம் உங்கள் ஆயுதம் ! | வெற்றி

தைரியத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று உடல் தைரியம் , மற்றொன்று மனோ தைரியம். உடல் தைரியம் என்பது உடல் வலிமை. மனோ தைரியம் என்பது மன வலிமை.உடல் தைரியமே மனோ தைரியத்தை நம்பி தான் உள்ளது.
நாம் சாதிக்கும் ஒவ்வொரு செயலின் பின்னால் மனோ தைரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனோ தைரியம் இல்லாமல் ஒரு மனிதன் சாதித்தான் என்ற சரித்திரம் உலகில் இல்லை. வாழ்வில்  பல மலைப்பான தருணங்களையும் தாண்டி வர இந்த மனோ தைரியமே உதவி புரியும். 

செல்வி ஒரு சிறுமி. எந்த வசதியும் இல்லாத ஒரு சிறிய கிராமத்தை இருப்பிடமாக கொண்டவள். ஒரு குடம் தண்ணீர் வேண்டும் என்றாலும் 8 கிமீ நடந்து சென்றால் தான் கிடைக்கும். அவ்வளவு ஏழ்மை. பிறந்ததில் இருந்தே பல கஷ்டங்களை கண்டு வளர்ந்ததால், மனோ தைரியமும் அவளுடன் சேர்ந்து வளர்ந்து இருந்தது. ஒரு நாள் தன் பாட்டியுடன் தண்ணீர் எடுக்க சென்று இருந்தாள் . அவள் வயதோ 3 தான். தண்ணீர் குடத்துடன் வீடு திரும்புகையில் , அவள் பாட்டி மயங்கி விழுந்து விட்டார். அருகில் யாரும் இல்லை.  

அவள் எண்ணம் முழுவதும் பாட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், 15 கிமீ தள்ளி இருந்த ஆஸ்பத்திரியை நோக்கி வேகமாக ஓடினாள். வெளிச்சம் கூட இல்லை. மனோ தைரியம் மட்டும் இருந்தது. பின், ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்களை அழைத்து கொண்டு தன் பாட்டி மயங்கிய இடத்திற்கு  வந்து , தன் பாட்டியை காப்பாற்றினாள்.

இப்பொழுது சொல்லுங்கள், முடியாது என்று என்னும் மலைப்பான காரியாதையும் முடித்து வைக்கும் சக்தி மனோ தைரியத்திற்கு உண்டு தானே?


தமிழ் பொன்மொழிகள்:


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக