நாம் பிறரை எவ்வளவு தான் நேசித்தாலும் , அவர்கள் நம்மை கண்டு கொள்ளவே இல்லை எனில்? என்ன செய்ய ? செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
எத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க ? தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா ? ஏக்கத்தின் முடிவு ?
ஒரே கோணத்தில் யோசிப்பது மிக எளிது . ஆனால் , உறவுகளை காக்க அது உதவாது. ஒரு விஷயத்தில் பல கோணங்கள் இருக்கும் என்ற அகலப் பார்வை இல்லாத காரணங்களே, இன்று பல உறவுகள் எப்பொழுது உடையும் என தெரியாத பிணைப்புடன் நகர்ந்துக் கொண்டு உள்ளது.
சிரிப்பதற்கு காசு , பணம் தேவை இல்லை. உள்ளம் சிரிக்க வேண்டும் என ஆணை இட வேண்டும். அவ்வளவு தான். சிரிப்பை மறந்து , பல வருடங்கள் போனாலும் , சிரித்த நாட்களில் அமைந்த நட்புணர்வு என்றும் விலகுவது இல்லை.
இந்த காலத்திலும் சரி, அந்த காலத்திலும் சரி, குழந்தைகள் சொல் பேச்சு கேட்க்காமல் இருப்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவாலாக தான் இருக்கிறது.குழந்தைகள் உலகை , வாழ்வை சரியாக புரிந்துக் கொள்ள ஆரம்பிக்கும் கால கட்டம் வயது 25. இந்த கணிப்பு ஒரு சராசரி கணிப்பு தான். 15 வயதில் வாழ்வியல் அனுபவதை சரியாக பயன் படுத்தும் குழந்தைகளும் உண்டு . 65 வயதிலும் வாழ்வியல் பற்றிய முதிர்ச்சியே இல்லா முதிர்ந்த குழந்தைகளும் உண்டு.
காலை முதல் இரவு வரை அயராது உழைக்கும் உடலுக்கு சிறிது ஓய்வு இருந்தால் நன்றாக தான் இருக்கும். ஓய்வு என்றவுடன் மனதில் தோன்றுவது என்னவாக இருக்கும்? ஓய்விலும், பயனுள்ள ஓய்வு எடுப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்பவர்கள். தன் ஒரு வேலைக்கு மாற்றாக மற்றொரு பயனுள்ள வேலையை செய்து , ஓய்வு எடுப்பவர்கள்.
எத்தனை போட்டியாளர்களை மனதில் உருவெடுத்து வைத்து உள்ளீர்கள். ஒன்றா ? இரண்டா ? அல்லது மூன்று ? மனித சக்தி ஒரு வரையறைக்கு உட்பட்டது அல்ல. எண்ண முடியாத அளவு பறந்து விரிய கூடியது. போட்டியாளர்களை தேர்வு செய்து உங்களின் அளவில்லா சக்தியை , ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சித்தால் , நீங்கள் உங்கள் போட்டியாளர் அளவு தாழ்ந்துத் போவீர்கள். இந்த தாழ்வு உங்களுக்கு வேண்டுமா?
உறவுகளாலும் , நட்புகளாலும் பின்னி பிணைந்துள்ள நமக்கு, ஒவ்வொரு கால கட்டத்திலும் புது புது மக்களின் அறிமுகம் கிடைக்க தான் செய்கிறது. சிறு வயதில் ஒரு வகை அறிமுகம், நடுத்தர வயதில் ஒன்று என , மக்களுக்கும் நமக்கும் உள்ள உறவுகள் புதுபிக்கப் பட்டு கொண்டே உள்ளன. கடமைகளும் புதுப்பிக்க பட்டு கொண்டே உள்ளன .
அறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது வெறித்தனமான அன்போடு பழகுகின்றோம். இந்த மனிதர் இந்த சந்தோசத்தின் அஸ்திவாரம் என மனம் சொல்கிறது. கண்மூடி தனமான நம்பிக்கை ஏற்படுகிறது. நம்பிக்கை அதிகம் ஆகிறது.
ஆசைப்பட்ட குறிக்கோளில் தோல்வியின் தாக்கம் தழுவ, காரணங்கள் இதுவோ அதுவோ என மனம் தவிக்கிறது. இவ்வளவு முயற்சிதோமே, என்ன இது ! என பல நாட்கள் மனம் வெம்பி, சோகம் தாக்க, தூக்கம் வராத நாட்களும் இருக்க தான் செய்கிறது. அனைவருக்கும் வெற்றி முதல் முயற்சிலேயே கிடைத்து விடுமா என்ன? ஒருவருக்கு முதல் முயற்சியே வெற்றி, மற்றவருக்கோ முப்பதாவது முயற்சியில் தான் வெற்றி. சிலருக்கோ முயற்சியே வாழ்க்கை.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களை நாம் பார்க்கும் பொழுது, அவர்கள் என்னவோ கடவுளிடம் வரம் வாங்கி வந்த உயிரினமாக மனதில் தோன்றுவது இயற்கை. ஏன்! கழுகை பார்க்கும் பொழுது கூட, மற்ற பறவைகளுக்கு இவ்வாறு தான் மனதில் தோன்றுமோ என்னவோ ?
இந்த வீடியோவை பாருங்கள். ஒவ்வொரு வெற்றி மனிதனும், வாழ்வில் கடந்து வரும் பாதை இதை போன்றது தான்.
அதிக நாட்கள் உயிர் வாழ யாருக்கு தான் பிடிக்காது. ஒரு நொடி ஆயுள், கூட கிடைத்தாலும் சந்தோசம் தான். உடலின் ஆயுள், என்றோ ஒரு நாள் முடியும் என்ற நிதர்சனத்தை நம்மால் மாற்ற இயலாமல் போகலாம். காலத்தை வெல்லும் ஆற்றல் கூடவா இல்லாமல் போய் விடும்?
கடைக்கு சென்றால் பொருளுக்கு விலை உண்டு. உங்களுக்கே விலை கொடுக்க ஒருவர் தயாராக இருந்தால்...? நீங்கள் பணத்துக்கா? மிரட்டலுக்கா? அழகுக்கா ? புகழுக்கா ? அல்லது அன்புக்கா ? எதற்கு விலை போவீர்கள். அது தான் உங்கள் விலை என்றால்?
இன்று பலரின் வெற்றி, தன்னை சார்ந்து மட்டும் தான் உள்ளது. தான் மட்டும் வெற்றி பெற்றாலே, தன் முழு வெற்றி முடிந்து விட்டது என்ற எண்ணம். இந்த அறியாமை எண்ணமே, மிகப் பெரிய வெற்றி நம் அருகில் இருந்தாலும், தெரியாத, கிடைக்காத சூழலை ஏற்படுத்துகிறது.
' யார் கண்ணிலேயும் பட வில்லையே ? ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான் ஒழுக்கமானவன் என தம்பட்டம் அடித்து கொள்வதில் இல்லை தனி மனித ஒழுக்கம்.
என் வட்டத்தில் உன்னை சேர்க்கிறேன். உன் வட்டத்தில் என்னை சேர். என் வட்டத்தில் உன்னை சேர்க்க என்ன விதி முறை தெரியுமா? நான் சொல்வது அனைத்தும் நீ கேட்க வேண்டும். நான் தான் வட்டத்தின் தலைவன் . உன் வட்டத்தில் என்னை சேர். இவ்வாறு தலைமை எடுப்போர் சிலர். தான் விவரமானவர் என்றும் சொல்லிக் கொள்வர்.
நீங்கள் பிறந்த இடமோ, பெற்றோரோ, சுற்றத்தாரோ உங்கள் விதியாக இருக்கலாம். சிறு வயதில் உங்களுக்கு கிடைத்த , கிடைக்காத அனைத்தும் உங்கள் விதியாக இருக்கலாம். காரணம் என்ன?