ஞாயிறு, 30 ஜூலை, 2017

பிறர் உங்களை அணைக்க... | வெற்றி

நாம் பிறரை எவ்வளவு தான் நேசித்தாலும் , அவர்கள் நம்மை கண்டு கொள்ளவே இல்லை எனில்? என்ன செய்ய ? செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.பணத்தின் தேவை இருப்பவர், பணத்தின் பின் தான் ஓடுவார். அன்பின் தேவை இருப்பவர்  அன்பின் பின் தான் ஓடுவார். அழகின் தேவை இருப்பவர், அழகின் பின் தான் ஓடுவார்.நம்மிடம் இருப்பதை கொடுத்து விட்டு, அவர் கண்டு கொள்ள வில்லை என புலம்புவதில் பலன் இல்லை.

பிரபு என்ன தான் ஓடி ஓடி உடல் உழைப்பிலான உதவிகள் செய்தாலும்  , அன்பை பொழிந்தாலும், சொந்தங்கள் , அவரை அணைக்க வில்லை. பணத்தை மதிக்கும் சொந்தங்கள், அன்பையும் உழைப்பில் தரும் உதவியையும் மதிக்குமா? பிரபு பணத்தை கொடுத்திருந்தால், சொந்தங்கள் அணைத்திருக்கும்.

10 வருடங்களாக அன்பும், உடல் உழைப்பும் தேவைப்பட்ட இடத்தில் கடமைகளை செய்ய மறந்த சந்துரு, என்ன தான் பணத்தை அள்ளி கொடுத்து என்னை கவனி என அழைத்தாலும் , அவரை அண்ட எந்த சொந்தமும் தயாராக இல்லை. அன்பும் உடல் உழைப்பும் தேவைப்பட்ட  இடத்தில் , பணம் எடுபடுமா?  சந்துரு அன்பையும், சரியான நேரத்தில் உடல் உழைப்பையும் கொடுத்திருந்தால், சொந்தங்கள் அணைத்திருக்கும்.


அன்பு, பணம் , பதவி, தகுதி, உழைப்பு ,அழகு என அனைத்தும் நம்மிடம் மிதமிஞ்சி இருந்தால் கூட, பிறர் நமக்கு வேண்டும் எனில், அவர் தேவை அறிந்து கொடுக்க வேண்டும்.வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக