வெள்ளி, 28 ஜூலை, 2017

எனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு ! | வெற்றி

எத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க ? தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா ? ஏக்கத்தின் முடிவு ?

கிராமத்தில் இருக்கும் சேவல்கள்  ஏரியா பிரித்து தான் பிழைக்கின்றன. எனக்கொரு ஏரியா , உனக்கொன்று. மீறி வந்தால் கொட்டு தான். 

தலைவர் சேவலின் தகுதி என்ன? தினம் காலை சரியான நேரத்தில் எழுந்து கம்பீரமாக, சப்தமாக கூவ வேண்டும். இது என் ஏரியா. வந்தால் சங்கு தான் என்று பக்கத்துக்கு ஏரியா தலைவர் சேவலுக்கு தினம் ஒரு அறிவிப்பு. இதன் பரிசாக , ஒரு அழகிய பெரிய கொண்டையை , எந்த சேவலும் அடையா கொண்டையை , தலைவர் சேவல் கொண்டிருப்பார்.

இந்த தலைவர் சேவல் இயற்கையாக தவறி விட்டார். அது வரை அடங்கி இருந்த,  ஏற்கனவே உள்ளுக்குள் தகுதியை வளர்த்து வந்த ஒரு சேவல் தம்பி மட்டும், 

அடுத்த ஏரியா தலைவர் கால் பதிப்பதற்குள்,தன் ஏரியா சேவல்களும் கால் பதிப்பதற்குள்,  நான் இருக்கிறேன் என் கோழிகளையும் , சேவல்களையும் காக்க என, 

விரைவாக,  வாய்ப்பை பயன் படுத்தி, கம்பீரமாக தினம் காலை சரியான நேரத்தில் நின்று கூவ முயற்சி செய்து , வலுவான குரலையும் பெற்று, மிகப் பெரிய கொண்டையையும் பெற்று , தலைமை பொறுப்பை , உடனடியாக ஏற்பார். இறந்த சேவலின் அடுத்த வாரிசு சேவலாக, தலைவனாக வாழ்ந்துக் காட்டுவார்.

தலைமை பொறுப்புகளுக்கான தகுதிகளை உள்ளுக்குள் வளர்த்து வந்தால் , வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் , வாய்ப்பை உடனடியாக பயன் படுத்தி தலைவராகி விடலாம். பலரோ, முதலில் தலைவர் பதவியை கொடு , பின் தலைவருக்கு உரிய பண்புகளுடன் வாழ்ந்து காட்டுகிறேன் என்பர். இந்த எண்ணம் என்றும் தலைவராக நிலைத்து நிற்க உதவாது. 


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக