ஞாயிறு, 23 ஜூலை, 2017

சொல்பேச்சு கேட்க்காத பிள்ளை , ஏன்? | வெற்றி

இந்த காலத்திலும் சரி, அந்த காலத்திலும் சரி, குழந்தைகள் சொல் பேச்சு கேட்க்காமல் இருப்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவாலாக தான் இருக்கிறது.குழந்தைகள் உலகை , வாழ்வை சரியாக புரிந்துக் கொள்ள ஆரம்பிக்கும் கால கட்டம் வயது 25. இந்த கணிப்பு ஒரு சராசரி கணிப்பு தான். 15 வயதில் வாழ்வியல் அனுபவதை சரியாக பயன் படுத்தும்  குழந்தைகளும் உண்டு . 65 வயதிலும் வாழ்வியல் பற்றிய முதிர்ச்சியே இல்லா முதிர்ந்த குழந்தைகளும் உண்டு.


குழந்தைகளின் உள் தன்மை , சூழ்நிலைகளோடு இணையும் பொழுது , அவர்களின் வெளி பாடு நேர் மறையாகவோ , எதிர் மறையாகவோ அமைகிறது. யோசித்துப் பாருங்கள் , பிள்ளை , உங்கள் சொல் பேச்சு கேட்க வில்லை என வருத்தமா ? அல்லது எதிர் மறை வாழ்வோடு ஒன்றி உள்ளனர் என வருத்தமா?

சொல் பேச்சு கேட்க வில்லை எனில் கவலையை விடுங்கள். உங்கள் மூளையை கொண்டு, அவர்கள் வாழ முடியாது. சிறு வயதிலேயே சுய முடிவு எடுக்கும் திறமையோடு உள்ளனர் என பெருமை தான் நீங்கள் பட வேண்டும்.

ஒரு தலை முறை தாண்டிய அவர்கள் , எதிலும் முன்னோடியாக இருக்க நினைப்பது வழக்கமான ஒன்று தான். நம் சொல் கேட்க வில்லை என நாம் புலம்பினால் , நம்மிடம் உள்ள ஈகோவே அவர்களை புரிய மறுக்கும் காரணியாக இருக்கும் .

அவர்கள் உலகம் அறியாமல், எதிர்மறை வாழ்வோடு ஒன்றினால், உண்மையிலேயே கவலை தான். 

மூன்று விஷயங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒன்று : அவர்களின் ஜீன் அமைப்பு , இரண்டு : பெற்றோர்களாகிய நாம் , மூன்று : சுற்றிலும் உள்ள சூழ்நிலை.

இவற்றின் சராசரி தான் பிள்ளையின் வாழ்வை எதிர் கொள்ளும் விதம். பிள்ளைகளுக்கு ஆணை பிறப்பிப்பவர் தேவை இல்லை , வழி காட்டி தான் தேவை. உங்கள் பழக்க வழக்கங்கள் நேர் மறையாக இருந்தால், அதுவே பிள்ளைகளின் முக்கிய வழி காட்டுதல். அவர்களின் சூழ்நிலைகளை சரியாக அமைத்து கொடுத்தீர்கள்  எனில் , அது இரண்டாவது பெரிய வழி காட்டுதல். இத்தனையையும் தாண்டி, அவர்கள் தவறு செய்தால் , ஜீன் அமைப்பின் ஆதிக்கமாக இருக்கும். அதாவது ஆழ் மனதில் இருக்கும் எண்ண பதிவுகள் , அவர்களை அறியாமலேயே செயல் படும். இதனை நேர் மறையாக மாற்றும் சக்தி , தியானத்திற்கு உண்டு. 14 வயதிலேயே , தியானத்தை பழக்கலாம் .

இவை அனைத்தும் நேர் மறையாக இருந்தால் , பிள்ளைகளின் வாழ்வை அணுகும் முறையும் நேர்மறையாக தான் இருக்கும் . சொல் பேச்சு கேட்க வில்லை, ஏன் என்ற கேள்வி எழாது. உங்கள் பேச்சை கேட்டால் வாழ்வில் அடையும் வெற்றியை விட அதிகம் அடைய, அவர்கள்  எண்ணங்களே அவர்களை அழைத்து செல்லும். அது தான் , உங்களுக்கும் பெருமை.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக