வெள்ளி, 14 ஜூலை, 2017

கவனத்தை சரியான இடத்தில் செலுத்தினால்... | வெற்றி

ஆசைப்பட்ட குறிக்கோளில்  தோல்வியின் தாக்கம் தழுவ, காரணங்கள் இதுவோ அதுவோ என மனம் தவிக்கிறது. இவ்வளவு முயற்சிதோமே, என்ன இது ! என பல நாட்கள் மனம் வெம்பி, சோகம் தாக்க, தூக்கம் வராத நாட்களும் இருக்க தான் செய்கிறது. அனைவருக்கும் வெற்றி முதல் முயற்சிலேயே கிடைத்து விடுமா என்ன? ஒருவருக்கு முதல் முயற்சியே வெற்றி, மற்றவருக்கோ முப்பதாவது முயற்சியில் தான் வெற்றி. சிலருக்கோ முயற்சியே வாழ்க்கை. 


ஏன் இந்த வேறுபாடு ?  என்றாவது மனம் யோசித்தது உண்டா? ஒருவேளை, திறமை குறை பாடா ? நேரம் ஒத்துழைக்கவில்லையா? யாரேனும் சூனியம் வைத்து விட்டார்களா? ஜாதகம் சரியில்லையா? ஏன் இப்படி ? மனம் துடிக்க தான் செய்திருக்கும், 

காரணம் என்னவோ இது தான், 

எந்த ஒரு செயல் செய்தாலும் , மனம் சிதறி கொண்டே இருந்தால், வெற்றி எட்டா கனியாக தான் இருக்கும். சிதறாத மனதிற்கு - அடுத்த தடத்தை சரியான இடத்தில் பதிக்கவும் தெரியும் , எந்த இடத்தில் தடத்தை பதித்தால் கால் சறுக்கும் என ஆழ் மன உந்துதலை உணரும் சக்தியுடன், தவறான செயலில் இருந்து விலகவும்  தெரியும் .

பாலுவிற்கு கணக்கு பாடம் புரியவில்லை , எத்தனை முறை முயற்சி செய்தாலும் , கிடைக்கும் மதிப்பெண் 45 க்கு கீழ் தான் , அதே பாலு கிரிக்கெட்டில் கெட்டி. மாவட்ட சாம்பியன். கணக்கில் திறமை இல்லாதவனா ? அல்லது கிரிக்கெட்டில் திறமைசாலியா? 

இரண்டு செயல்களையும் உன்னிப்பாக கவனித்தால் , ஒன்று புரியும் . கிரிக்கெட்டின் மேல் உள்ள ஆழ்மன ஆசை பாலுவிற்கு , உண்மையில் கணக்கு பாடத்தின் மேல் இல்லை. என்ன தான் மனதளவில் ஆயிரம் முயற்சி செய்தாலும் , இல்லாத ஆசையால் , அவரால் பாடத்தின் மேல் வைக்க வேண்டிய கவனம் சிறிதளவேனும், தேவையான கவனத்தையும்  தாண்டி சிதறுகிறது. தோல்வியே எட்டுகிறது.

ஆனால், அதே பாலுவிற்கு சொல்லவே வேண்டாம். கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம். அவர் நினைக்கா விட்டாலும் , உணர்வுகள் தூண்டி , காரியத்தில் வைக்க வேண்டிய கவனம் சிதறாமல் , தானாக வருகிறது.

அளவில்லா ஆசைகள் உள்ள இடத்தில் தான், கவனங்கள் தானாக, சிதறாமல் அமையும். கவனம் சிதறாத இடத்தில் தான் வெற்றி உடனே அமையும். உங்கள் வெற்றி தள்ளிப் போய் கொண்டு உள்ளது எனில், ஆசை போத வில்லை எனவும், ஆசையினால் தூண்டப் படவேண்டிய கவனம் போதவில்லை என்னவும் அர்த்தம். ஆசை மனதளவில் அல்ல , உணர்வளவில் இருக்க வேண்டும்.

நல்ல ஓவியன் , மனதளவில் அல்ல , உணர்வளவில் ஓவியத்தின் மேல் காதல் கொண்டு இருப்பார்.

நம்மில் பலரோ , அறியாமையால் , மனதளவில் உள்ள ஆசையை , குறிக்கோள் என நம்பிக்கை கொண்டு, பல முறை முயற்சித்தாலும் வெல்ல முடியாமல் தவிக்கிறோம்.  

சிலரை பார்த்து , இந்த பரம்பரையே இப்படித்தான் , அனைத்து தலைமுறையும் பரத நாட்டியம் ஆடுவதில் கெட்டி, சிறு வயதில் இருந்தே திறமை இயற்கையாக வருகிறது என்று நினைத்திருப்போம் . 

உண்மை என்ன வென்றால், பாட்டிக்கு இருந்த கலை ஆசை ,  ஜீன் அமைப்பில் , உணர்வு பூர்வமாக பேத்திக்கு வந்தால் , அறியா இளமை பருவத்திலேயே பரதம் ஆடுவது இயற்கை தானே?

உங்களுக்கு வெற்றி உடனே வேண்டுமா? உணர்வு பூர்வமான , அதிகப் படியான ஆசையை , சரியான செயல் மீது, அந்த செயலே நீங்களாக , உணரும் அளவு வையுங்கள். சிதறாத கவனம் தானாக, அமைந்து ,  உங்களுக்கு அதுவே வழி காட்டும். எது   செய்ய கூடாது என்பது புரிந்து, தவறுகள் விலக விலக,  வெற்றி பாதை தானாக உங்கள் கண் முன் தெரியும்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக