ஞாயிறு, 16 ஜூலை, 2017

புரிதல் இல்லா வெறித்தனமான அன்பு! | வெற்றி

அறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது வெறித்தனமான அன்போடு பழகுகின்றோம். இந்த மனிதர் இந்த சந்தோசத்தின் அஸ்திவாரம் என மனம் சொல்கிறது. கண்மூடி தனமான நம்பிக்கை ஏற்படுகிறது. நம்பிக்கை அதிகம் ஆகிறது. 


எல்லாம் சரிதான் . சில நாட்களில் எல்லாம் தலைகீழ் ஆகிறது. பழகிய மனிதர்கள் நம்பிக்கை துரோகிகளாய் தெரிகின்றனர். ஏன்? ஏன் இந்த வலி ? சரியாக தானே அன்பு காட்டினோம். என் அன்பில் குறை உண்டா ? ஏன் இந்த வலி , எனக்கு மட்டும் ஏன் இந்த துரோகம் என  மனம் புலம்புகின்றது. 

கண்மூடி தனமான அன்பு காட்டினோம் . என்றாவது அவர் குணாதசியம் என்ன என புரிந்தோமா ? இவர் இப்படித்தான் என முடிவே எடுத்து விட்டோம் . புரிதலையும் தாண்டி அன்பு மேலோங்கி இருந்தது. புரிதல் வரும் பொழுது, இவர் தவறானவர் என மனம் சொல்லும் பொழுது, கொடுத்த அன்பு மிதமிஞ்சி விட்டது. இதயத்தில் இருந்து கிளம்பிய அன்பு அல்லவா? தவறான மனிதனுக்கு கொடுத்ததினால் , வலியாக திருப்பி அடிக்கிறது.

புலியின் மீது மான் அன்பு காட்டினால்? புலி என்று தெரிந்தா மான் அன்பு காட்டியது? அதுவும் மான் என்ற நம்பிக்கையில் அல்லவா அன்பு காட்டியது. இது மான் அல்ல புலி தான் என புரிந்தவுடன் , மானின் அன்பு வலியாக அதற்கு திரும்பி வருகிறது.

 இங்கே ஒரு மனிதன் மற்றோரு மனிதனுக்கு கண்மூடி தனமான அன்பு காட்டும் முன்பு , இவர் யார் என்ற முழு புரிதல் வேண்டும் , முழு புரிதலின் பின் காட்டும் அன்பிற்கு , என்றும் சமநிலை படுத்தும் பக்குவம் இருக்கும் .  புரிதல் இல்லாத வெறித்தனமான அன்பு என்றும் வலியை தான் கொடுக்கும் .


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக