செவ்வாய், 4 ஜூலை, 2017

உன் வட்டத்தில் நான் உண்டா ? | வெற்றி

என் வட்டத்தில் உன்னை சேர்க்கிறேன். உன் வட்டத்தில் என்னை சேர். என் வட்டத்தில் உன்னை சேர்க்க என்ன விதி முறை தெரியுமா? நான் சொல்வது  அனைத்தும் நீ கேட்க வேண்டும். நான் தான் வட்டத்தின் தலைவன் . உன் வட்டத்தில் என்னை சேர். இவ்வாறு தலைமை எடுப்போர் சிலர். தான் விவரமானவர் என்றும்  சொல்லிக் கொள்வர்.


வேறு ஒரு  வகை  உண்டு . அனைவர் வட்டத்திலும், கை ஒன்று கால் ஒன்றாக நிற்பர். சூழ்நிலைகளுக்கு தக்கவாறு, வேண்டிய வட்டத்தில் நிற்கும்  பட்சோந்தி எண்ணம் கொண்டோர்  இவர்கள். விபரமாக தான் பிழைப்பதாக எண்ணிக் கொள்வர்.

மற்றும் ஒரு வகை  உண்டு. உனக்கு நான் இதை தருகிறேன், நீ எனக்கு அதை தா . நீயும் நானும் ஒரு வட்டம். நீயும் நானும் சேர்ந்து முடிவெடுப்போம் என்பர். தான் நடைமுறை வாழ்க்கை வாழ்வதாக சொல்வர்.

இவ்வாறு,  கூட்டு சேர்ப்பதில், பல வகை வட்டங்கள் உண்டு. ஏன் ! இவை அனைத்தின் கலப்பிட வகைகளும் உண்டு.

இதில் எது சரி, எது தவறு, என பேசுவதிற்கு இங்கு வழி இல்லை. நீங்கள் எந்த வட்டத்தில் வேண்டுமானாலும் இருந்துக் கொள்ளுங்கள். வாழ்பவர் நோக்கத்தை பொறுத்தது அது. ஆனால் , உங்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு வட்டம்,  அழுத்தமான ஒரு  வட்டம் கண்டிப்பாக  வேண்டும். அந்த வட்டத்தின்  மையமாக,  அனைத்துமாக நீங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும்.

அன்பு, பாசம், காதல், கடமை  என்று  அனைத்து உணர்வுகளுக்கும், மனிதர்களுக்கும்   இணக்கமாக , நியாயமாக, நீங்கள் விரிவாக்கும் வட்டங்களில், இடம் அமையலாம், ஆனால் , உங்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு வட்டம் கண்டிப்பாக வேண்டும். வேறொரு வட்டத்தில் மனம் நாடி, உங்களுக்கே வட்டம் இல்லாமல் உங்களை நீங்களே  இழந்து வாழாதீர்கள். 

ஏனெனில், ஒரு  நாள், நீங்கள் வேண்டும் என விரும்பிய வட்டத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். ஒரு நாள், எந்த வட்டமும் உங்களை கூட்டு சேர்க்காத  நிலையும் வரலாம். இதை தாங்கும் சக்தியை உங்களை மட்டும் உள்ளடக்கிய  வட்டம் தான் உங்களுக்கு கொடுக்கும். 

உங்கள் வட்டத்தை எவ்வளவு வலிமை உள்ளதாக , யாரையும் சாராமல் அமைக்கிறீர்களோ அவ்வளவு சக்தி உங்களுக்கு. அதுவே கடைசி வரை நிரந்தரம். மற்றவை ? எந்த இடத்தில் எந்த வட்டம் அழியுமோ ? யாருக்கு தெரியும். 
வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக