புதன், 19 ஜூலை, 2017

உங்களின் போட்டியாளர் யார்? | வெற்றி

எத்தனை போட்டியாளர்களை மனதில் உருவெடுத்து வைத்து உள்ளீர்கள். ஒன்றா ? இரண்டா ? அல்லது மூன்று ? மனித சக்தி ஒரு வரையறைக்கு உட்பட்டது அல்ல. எண்ண முடியாத அளவு பறந்து விரிய கூடியது. போட்டியாளர்களை தேர்வு செய்து உங்களின் அளவில்லா சக்தியை , ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சித்தால் , நீங்கள் உங்கள் போட்டியாளர் அளவு தாழ்ந்துத் போவீர்கள். இந்த தாழ்வு உங்களுக்கு வேண்டுமா?

விளையாட்டில் வேண்டுமானால் போட்டியாளர் இருப்பர். அவரை வெற்றி பெற்றாலே விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற்றவர். வாழ்க்கை என்ற விளையாட்டில் வெற்றி எல்லை உங்களின் அபிரிதமான சக்தியின் நிரூபணம். உங்கள் அருகில் உள்ள நபர்களை, அவர்களில் சக்தி எல்லையை உங்கள் எல்லையாக நிர்ணயித்து உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற இயலாது.

பாலு ஒரு பூ வியாபாரி . அவரின் எண்ணம் எல்லாம் தன் அருகில் உள்ள பூ வியாபாரியை விட அதிக பூக்களை ஒரு நாளில் விற்று விட வேண்டும். அவ்வாறு அன்றைய தினம் அவரால் விற்க முடிந்தால் அது தான் அவரின் வெற்றி. அவர் வாழ்க்கையின் வெற்றி பயணம் அதனுடன் முடிவடைந்து விட்டது.அவரின் வெற்றி எல்லையை , அருகில் இருக்கும் பூக் கடைகாரரின்  வெற்றி எல்லையோடு நிறுத்தி விட்டார். இதே பாலு, தன்னையே தனக்கு ஒரு போட்டியாளராக நினைத்து , நேற்றைய தினத்தை விட இன்று அதிக பூக்கள் விற்பனை , இன்றைய தினத்தை விட நாளை அதிக விற்பனை என நினைத்து இருந்திருந்தால் , அவரின் வெற்றி எங்கோ சென்று இருந்திருக்கும்.   அடுத்தவரை நினைத்து , அவர் இதை செய்து வென்று விடுவாரோ , அதை செய்து வென்று விடுவாரோ என்ற வீண் பயமும் இல்லாமல் இருந்திருக்கும்.

அருகில் உள்ளவர் எந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ளார் என ஆராந்து , நமக்கு தேவையான நல்லதை எடுத்துக் கொள்ளலாம். அவரை முந்துவதே எல்லாமாக ஏன் நினைக்க வேண்டும்? 

உங்களின் சக்தி எல்லையை தான், வெற்றி எல்லையாக, உங்களால் நிர்ணக்கப் பட வேண்டும். உங்களின் நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் உங்களை நீங்களே வெற்றி பெறுங்கள். இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் உங்களை நீங்களே வெற்றி பெற திட்டம் போடுங்கள். உங்களின் போட்டியாளர் நீங்களாக தான் இருக்க இயலும். அது தான் உங்களுக்கு நிரந்தர முன்னேற்ற வளத்தை ஏற்படுத்தும் செயல்.  


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக