புதன், 5 ஜூலை, 2017

தனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது? | வெற்றி

' யார் கண்ணிலேயும் பட வில்லையே ? ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான் ஒழுக்கமானவன் என தம்பட்டம் அடித்து கொள்வதில் இல்லை தனி மனித ஒழுக்கம். 


உள் மனதில் அப்பழுக்கு இல்லாத பொழுது , அடுத்தவர் கண்களுக்கு  சூழ்நிலை காரணமாக தவறாக தெரிந்தால், அடுத்தவர் பார்வையாலும் கணிக்க இயலாது, நம்  தனி மனித ஒழுக்கத்தை. 

தனி மனித ஒழுக்கம், அத் தனி மனிதனின்  மனதில் உள்ளது. பார்ப்பவர் பார்வையில் இல்லை.

இங்கோ பலர் , உள்மனதை குப்பை யாக்கி, அடுத்தவர் பார்வைக்காக தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்கின்றனர். உள்ளுக்குள் ஒழுக்கம் இல்லாத பொழுது, வெளி ஒழுக்கம் இருந்தால் என்ன , இல்லா விட்டால் என்ன ?  

நம் மனதில் இருக்கும் தனி மனித ஒழுக்கமே நம்மை வாழ வைக்கும் . விதைக்குள் இருக்கும் நல்ல அமைப்பே , அதன் வளர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும். கெட்டுப் போன விதைக்கு என்ன மேக்அப் போட்டு , வெளி உலக பார்வைக்கு அழகாக மண்ணுக்குள் அமர வைத்தாலும் , அதன் வளர்ச்சி விகிதம் மாறப் போவது இல்லை. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா?

நீங்கள் ஒழுக்கமானவரா என , உங்கள் மனதை கேளுங்கள் . அடுத்தவர் கண்களில் அதனை தேடாதீர்கள். சமுதாய கண்களின் மதிப்பீடு, உங்கள் உள் ஒழுக்கத்தை தாண்டிய ஒன்று. நீங்கள் தான், உங்களை வாழ வைக்கப் போகிறீர்கள்.

நீங்கள்   ஒழுக்கமானவர் என உங்கள்  உள்மனது கொடுக்கும் மதிப்பீட்டை விடவா , உயரிய வாழ்க்கையை , அடுத்தவர் கண்கள் உங்களுக்கு  அமைத்து கொடுத்து விட போகிறது? 


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக