ஞாயிறு, 9 ஜூலை, 2017

உங்களின் விலை இதுவா ! | வெற்றி

கடைக்கு சென்றால் பொருளுக்கு விலை உண்டு. உங்களுக்கே விலை கொடுக்க ஒருவர் தயாராக இருந்தால்...? நீங்கள் பணத்துக்கா? மிரட்டலுக்கா? அழகுக்கா ? புகழுக்கா ? அல்லது  அன்புக்கா ? எதற்கு விலை போவீர்கள். அது தான் உங்கள் விலை என்றால்?எங்கோ ஒரு இடத்தில் , அறியாமலேயே விலைக்கு வாங்கப்  படுவது நீங்கள் என்றால் ! 

நாம் அனைவரும் ஏதோ ஒரு விலைக்கு உட்பட்டு தான் இருக்கிறோம். குழந்தைகளிடம் பாசத்திற்கு விலை போகிறோம். தவிர்க்க இயலாதது. ஆனால்... நம் விலை தாழ்வாக இருந்தால் , வெட்க பட வேண்டிய விஷயம். தாழ்வாக விலை போக சிலர் தயாராக இருப்பதால் தான், பலர் தவறை செய்து விட்டு , தேவையான பொழுது விலை கொடுத்து விடலாம் என , அனைத்து மனிதர்களையும் தன் போல் , எடை போடுகின்றனர்.

காசுக்காக ஓட்டு போடும் அளவிற்கு, விலை நிர்ணயம், சமுதாய குற்றத்தை அதிக படுத்துகிறது. 

உங்களின்  விலை, நியாயமானதாக இருந்தால், உங்கள் தரமும் உயர்ந்ததாக இருக்கும். யாருக்காக, எப்பொழுது, எதற்காக , என்ன விலைக்கு போக போகிறீர்கள் என்பதே உங்கள் தரத்தை காட்டும். உங்கள் தரத்தை உயர்த்துங்கள்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக