வெள்ளி, 21 ஜூலை, 2017

நீங்கள் ஓய்வு எடுப்பீர்களா ? | வெற்றி

காலை முதல் இரவு வரை அயராது உழைக்கும் உடலுக்கு சிறிது ஓய்வு இருந்தால் நன்றாக தான் இருக்கும். ஓய்வு என்றவுடன் மனதில் தோன்றுவது என்னவாக இருக்கும்? ஓய்விலும், பயனுள்ள ஓய்வு எடுப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்பவர்கள். தன் ஒரு வேலைக்கு மாற்றாக மற்றொரு பயனுள்ள வேலையை செய்து , ஓய்வு எடுப்பவர்கள்.


சந்துரு ஒரு நல்ல விளையாட்டு வீரர். அவருக்கு ஓய்வு என்பது தன் வெற்றிக்கான வாழ்க்கை சரித்திரத்தை புத்தகமாக எழுதுவது . மலரின் வீட்டு வேலைக்கு மாற்று, கைவினைப் பொருட்கள் செய்வது. 

உடல் ஒத்துழைக்க வில்லை என்றால், அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று திட்டமிடுதலும் , ஒரு பயனுள்ள ஓய்வாக தான் இருக்கும்.

சிலரின் வாழ்க்கை - உண்ணுதல் , பொழுதுபோக்கில் மனதை செலுத்துதல், உறங்குதல்  , என்றே கழிகிறது. வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும் அல்லவா?

சிறிதோ பெரிதோ , ஒரு துளியேனும் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் குறிக்கோள் இருந்தால், வாழ்க்கைக்கு அர்த்தம் தோன்றும்.

உறங்குவது, உடலை புத்துணர் கொள்ள வைக்கும் . அதற்காக எப்பொழுதும் ஓய்வு என்ற பெயரில் உறங்கி கொண்டே இருக்க இயலாது அல்லவா? 

ஒரு திரைப் படம் பார்த்தல் கூட , படத்தின் முடிவில்  எண்ணமும் , செயலும் உயர்வை நோக்கியது என்றால் திரைப் படம் பார்ப்பதே ஒரு நல்ல ஓய்வு தான். 

சிந்திப்போம். 


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக