புதன், 26 ஜூலை, 2017

ஒன்றின் பல கோணங்கள் ! | வெற்றி

ஒரே கோணத்தில் யோசிப்பது மிக எளிது . ஆனால் , உறவுகளை காக்க அது உதவாது. ஒரு விஷயத்தில் பல கோணங்கள் இருக்கும் என்ற அகலப் பார்வை இல்லாத காரணங்களே, இன்று பல உறவுகள் எப்பொழுது உடையும் என தெரியாத பிணைப்புடன் நகர்ந்துக் கொண்டு உள்ளது.


மரகதம்  தன் ஒரே மகனை , சிறு வயதில் இருந்து , கொள்ளை பிரியத்துடன் வளர்த்து வந்தார். அடிப்படையில் மிக நல்ல குணம் கொண்டவர். அவர் மகனும் அவ்வாறு தான். தன் தாய் என்றால் உயிர். மகனுக்கும் திருமணம் முடிந்தது .

மரகதம் தன் கணவரோடு ஒரு வீட்டிலும், மகன், மருமகள் வேலை காரணமாக வேறு ஊரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வீட்டு மருமகளும் மிக நல்லவர். சூழ்நிலை காரணமாகவும், தலை முறை வித்தியாசத்தினாலும் , மரகதத்தின் ஒரே கோண யோசிப்பாலும் , ஆரம்பத்தில் இருந்தே மரகத்திற்கு தன் மருமகள் மீது ஈடுபாடு இல்லை. 

மென்பொருள் துறையில் வேலை செய்யும் மருமகள், காலத்திற்கு ஏற்ப உடை அணிந்து , மதிக்க தக்க நாகரிகதோடு வேலைக்கு செல்வார். ஆனால் , மரகதம் மனதிலோ , மருமகள் திமிரானவர் என்று. மகனிடம் மருமகள் இவ்வாறு உடை அணிய கூடாது என கூறினார் . தன் மனைவியையும் , உலக சூழலும் புரிந்த மகன், தன் மனைவிக்கு ஆதரவாக பேசினார். மருமகளுக்கோ -  மரியாதையும் , நல்ல குணமும் மனதில் இருந்தால் போடாதா, வேலை செய்யும் இடத்திற்கு தக்க வாழ்ந்தால் தான் மரியாதை இருக்கும் என தன்னை மாற்ற முயல வில்லை.

மகனின் வாதத்தில் இருந்த நியாயதை புரிந்துக் கொள்ள மரகதம் தயாராக இல்லை.  தன் தாயின் கருத்தை, நியாயம் இல்லாதது என, ஏற்க மகனும் தயாராக இல்லை.  தன் வயதின் அனுபவம் , தன் மகனை காட்டிலும் பெரியது என, தான் சரியாக தான் பேசினோம், மகன் திருமணத்திற்கு பின்பு தவறான முறையில் மாறி விட்டான் என்ற நம்பிக்கையை மரகதம் வளர்த்துக் கொண்டார்.

காலங்கள் சென்றது. ஒரு முறை, பேரனுடன் 2 வாரங்கள் இருக்க , மரகதம் மகன் வீட்டிற்கு வந்தார்.

10 நிமிடங்களில் வீட்டிற்கு வர உள்ள விருந்தினரை கவனிக்க, அரை மணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டிய மகனுக்கோ, காய்ச்சலில் உள்ள மகனை கவனிக்கும் மருமகளுக்கோ , பதட்டம்.

முன் தினம் , வாங்கி வந்த முறுக்குகளை , கொண்டு உபசரித்து விடலாம் என்று என்னும் பொழுது, காரம் அதிகம் பிடித்த தன் அம்மா நினைவிற்கு வர, மகன் அவசரத்தில் அம்மாவை பார்த்து, " வரும் சொந்தம் எவ்வளவு முறுக்குகள் சாப்பிடுவார் என தெரிய வில்லை, எனவே, அவர்கள் முன் உங்களுக்கும் முறுக்கு வைத்தாலும் , அவர் முதலில் சாப்பிட்டு முடிக்கட்டும். நீங்கள் அவர் கிளம்பிய பின்பு கூட, இருப்பதைப் பொறுத்து முன்ன பின்ன சாப்பிட்டுக் கொள்ளலாம். என்றார் "

மரகததிர்க்கோ தாங்க இயலவில்லை. மகன் அலுவலகம் இருந்து திரும்பியவுடன் " நான் உன் வீட்டிற்கு விருந்தினராக வந்து இருப்பவர். அவரை போலவே என்னையும் கவனித்து இருக்க வேண்டும். முறுக்குகள் போதவில்லை என நினைத்திருந்தால், நீயோ, உன் மனைவியோ கடைக்கு சென்று அதிக முறுக்குகளை வாங்கி வந்து இருக்க வேண்டும்.  வேண்டும் என்றே திட்டம் போட்டு என்னை அவமதித்து விட்டீர்கள். உங்கள் வீட்டிற்கு நான் வருவது உங்களுக்கு பிடிக்க வில்லை. நீயும் மருமகள் பேச்சை கேட்டு கொண்டு இவ்வாறு நடக்கிறாய். இப்பொழுதே இவ்வாறு என்றால் , வருங்காலத்தில் ? " என புலம்பி தள்ளினார்.

என்ன தான் புரிய வைக்க முயற்சி செய்தாலும் , உண்மையை புரிந்துக் கொள்ள , தன் வீம்பால் , மரகதம் தயாராக இல்லை. மகன் மனமோ நொறுங்கி விட்டது. மகன் இப்படியா என்ற மாயை எண்ணத்தினால் , அதையே உண்மை என நம்பி மரகதம் மனமும் நொறுங்கி விட்டது. 

மகன் மீது கண்மூடி தனமாக பாசம் கொண்ட மரகதத்திற்கு, சிறு வயதில் இருந்தே தன் மீது பாசம் கொண்ட மகன், தன்னை அவமானப் படுத்தும் நோக்கில் காரியம் செய்வானா ? என மனம் யோசிக்க இயலாத அளவு வீம்பு. இந்த வீம்பே பல கோண யோசிப்பை தடுத்தது. உறவுகள் விரிசல் கண்டன. இதுவே தொடர்ந்தது. இங்கு , மரகதம் நல்லவர். மகன் நல்லவர் . மருமகள் நல்லவர். மூவரும் புரிதலோடு , அழகாக இருக்க வேண்டிய குடும்பம், மரகததின் ஒரே கோண யோசிப்பாள் , பொலிவிழந்து விட்டது. 

மரகதத்தை போல , எத்தனை பேர் இவ்வுலகில் பல கோணத்தில் யோசிக்க முயற்சித்தாலே எங்கே தான் ஏமாற்றப் பட்டு விடுவோமோ என்ற எண்ணத்தில், வீம்பாக உள்ளனர்! இவர்கள் புரிந்து நடந்தால் , பல குடும்பங்களின் உயிரோட்டம் காக்கப் படும்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக