ஞாயிறு, 9 ஜூலை, 2017

காலத்தை வெல்ல ஆசையா? | வெற்றி

அதிக நாட்கள் உயிர் வாழ யாருக்கு தான் பிடிக்காது. ஒரு நொடி ஆயுள், கூட கிடைத்தாலும் சந்தோசம் தான். உடலின் ஆயுள், என்றோ ஒரு நாள் முடியும் என்ற நிதர்சனத்தை நம்மால் மாற்ற இயலாமல் போகலாம். காலத்தை வெல்லும் ஆற்றல் கூடவா இல்லாமல் போய் விடும்?

அறிவியல் என்ன கூறுகிறது? ஒருவர் ஒரு வேலையை, சாதாரணமாக, தினம் மூன்று  மணி நேரம்  செய்தால், அந்த வேலையை  முடிக்க இரண்டு நாட்கள் எடுத்தால், அதே வேலையை அவர் வீரியத்துடன் அதே மூன்று  மணி நேரம் செய்தால்,  முடிக்க  ஒரு நாள் போதும் என்கிறது . அப்பொழுது வேலையை ஒரே நாளில் செய்யும் வீரிய திறன் உங்களிடம்  இருந்தால் , அந்த இடத்தில், நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள் !

திவ்யாவிற்கு புத்தகம் படிக்க மிகப் பிடிக்கும். ஒரு வருடத்தில் 50 புத்தகங்கள் படிக்கும் திறன் கொண்டவர். அவரால், ஒரு வருடத்தில் 100 புத்தகங்கள் படிக்கும் திறனை ஏற்படுத்த முடிந்தால், ஒரு வருடம் சேர்த்து ஆயுள் பெற்ற கணக்கு. ஒவ்வொரு செயலுக்கும் திறனை கூட்ட முடிந்தால், எவ்வளவு காலத்தை வெல்ல இயலும் பாருங்கள்.

கால கணிப்பு என்பது மனிதன் உருவாக்கிய ஒன்று. எவ்வளவு குறுகிய நேரத்தில் உங்களால் அதிக செயல்களை முடிக்க இயலுமோ , அவ்வளவுக்கு அவ்வளவு உங்களால் ,  உங்கள்  உடல் ஆயுளையும் மீறி காலத்தை வென்று வாழ இயலும்.

80 வருடங்கள் வாழ்ந்து, ஒரு செயலையும் செய்யாதவரை விட, 50 வருடங்கள் வாழ்ந்து 100 வருட செயலை செய்தவர் காலத்தை வென்றவர். 

அதிக நாட்கள் வாழ்ந்த பலன் , காலத்தை வென்ற பலன் , உங்கள் செயல் திறமைகளை நீங்கள் கூட்டும் பொழுது உங்களுக்கு கிடைக்கும்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக