ஞாயிறு, 2 ஜூலை, 2017

எது உங்கள் அதிஷ்டம்? | வெற்றி


நீங்கள்  பிறந்த இடமோ, பெற்றோரோ, சுற்றத்தாரோ உங்கள் விதியாக இருக்கலாம். சிறு வயதில் உங்களுக்கு  கிடைத்த , கிடைக்காத அனைத்தும் உங்கள்  விதியாக இருக்கலாம். காரணம் என்ன?


எதையும் புரிந்து கொள்ள இயலாத , மாற்ற இயலாத வயது அது. அறிவு வளர்ச்சி அடையும் கால கட்டம். உங்கள்  சமூக சூழலுக்கு ஏற்ப அறிவு தீட்டப் பட்டு, வளர்ந்து இருப்பீர்கள். ஆனாலும் , வளர்ந்த பின்பும் இதையே காரணம் காட்ட இயலாது. பிறரை காரணம் காட்டி , உங்கள் விதி இது என அமர்ந்தால் , நஷ்டம் என்னவோ உங்களுக்கு தான். சந்தேகமில்லை. 

எந்த திறமையும் இல்லாமல் கண்டிப்பாக எவரும் பிறந்து இருக்க வாய்ப்பே இல்லை. உங்கள் திறமை என்ன என அறிய முடியாத மாயையில் வேண்டுமானால் நீங்கள் சிக்கி இருக்கலாம்.

மாற்றான் ஒரு சாதாரண மீனவ சமுதாய இளைஞன். மூன்று வேலை உணவிற்கு கூட உத்திரவாதம் இல்லாத , குடும்ப பின்னணி. இந்த வறுமையில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தை தவிர, வேறு இல்லாத , இயலாத குறைகளை , ஏன் இப்படி , என எதையும் நினைத்து விதியே என அமர வில்லை அவர் .

வறுமையில் இருந்து மீள வேண்டும் என்ற அவரின் ஆழ்ந்த   எண்ணமே , அதில் இருந்து அவர் மீள - அவருக்குள்  உள்ள திறமையை வெளி காட்டியது. வாய்ப்புகளையும் காட்டியது. வாய்ப்புகளை பயன் படுத்தினார். வறுமையில் இருந்து மீண்டு விட்டார். இவ்வாறு ஒவ்வொரு நாளும் , நேற்றைய தினத்தை விட முன்னேற வேண்டும் என்ற ஒரே நேர் கொண்ட பார்வை தான். அதற்கான வாய்ப்புகள் கண் முன்னே பட்டது. இன்று , மாற்றான் , மிகப் பெரிய தொழில் அதிபர்.

மாற்றானுடன் , அவர்  சூழ்நிலையிலேயே , வளர்ந்த , மற்ற இளைஞர்களை விட , இன்று, வித்தியாசமாக மாற்றான் முன்னேறிய காரணம் என்ன?

விதியா? மற்றவரிடம் இல்லாத புது திறமையா? இவை அனைத்தையும் மீறி என்ன?

தன் மேல் முழு நம்பிக்கை கொண்டு, இருக்கும் சூழலில் இருந்து மீண்டு, ஒரு படியேனும் முன்னுக்கு செல்ல உழைப்பேன் என்ற வைராக்கியம். இந்த வைராக்கியம், கண் முன்னே வாய்ப்புகள் உள்ளதை உணர வைத்தது . உங்கள் மனதினுள் உள்ள வைராக்கியம் தான் நீங்கள். இன்றைய உங்கள் சூழலும் அதுவே. உங்கள் வைராக்கியம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கியதாக இருந்தால் , அந்த வைராக்கியமே உங்கள் அதிஷ்டம் .வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக