வெள்ளி, 7 ஜூலை, 2017

உங்கள் வெற்றியின் தொடக்கம் ! | வெற்றி

இன்று பலரின் வெற்றி, தன்னை சார்ந்து மட்டும் தான் உள்ளது. தான் மட்டும் வெற்றி பெற்றாலே, தன் முழு வெற்றி முடிந்து விட்டது என்ற எண்ணம். இந்த அறியாமை எண்ணமே, மிகப் பெரிய வெற்றி நம் அருகில் இருந்தாலும், தெரியாத, கிடைக்காத  சூழலை ஏற்படுத்துகிறது.

உங்களை நீங்கள் முழுதும் வலுவூட்ட வேண்டுமானால்,தன்னை மட்டுமே உள்ளடக்கிய ஒரு தனி வட்டம் வரையலாம். யாரையும் சாராமலும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்த தனி வட்டம் தான் உங்களுக்கு கொடுக்கும். இதில் சந்தேகம் இல்லை.

ஆனால், தன்னை மட்டுமே நினைத்து ,சுயநலத்துடன், வெற்றி வாழ்க்கை வாழ முடியுமா என்ன ? ஒரு குடும்பம் ஆனாலும் சரி, ஒரு தொழில் ஆனாலும் சரி, நம்மை சுற்றி உள்ளவர்களையும்  உயர்த்தினால் தானே , நம் வெற்றி உயரும். 

ஒரு குடும்பத்தில் கூட, கணவனும் மனைவியும் தனி தனியாக வெற்றி பெற்றால் போதும் என எண்ணுகின்றனர்.  தனி தனி தீவாக, தன் சொந்த தொழிலில் பெறும்  வெற்றியே தன் வெற்றி, என எண்ணுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். 

இருவரும் சேர்ந்த, குடும்பத்தில் உள்ளோரையும் சேர்த்து , ஒருவரை ஒருவர் வெற்றி அடைய வைப்பது தான்  தன் வெற்றி என்ற  உண்மை புரிய வேண்டும். அப்பொழுது தான், குடும்ப வாழ்வில் உண்மையான  வெற்றி காண இயலும்.  

மகேஷ் ஒரு சினிமா டைரக்டர். அவர் படம் எடுக்கும் தொழிலில் , எத்தனைப் பேர் அவரை சார்ந்து தொழில் புரிவர். ஒவ்வொரு கலைஞனின் தனி மனித வெற்றியை அவர் காட்டினால் தானே, அவரின் வெற்றி உயர்வாக அமையும். 

ஒரு குடும்ப வெற்றி , குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வெற்றி பெறுவது. ஒரு தொழிலில் முதலாளியின்  வெற்றி என்பது, தொழிலாளி ஒவ்வொருவரின் வெற்றியை உள்ளடக்கியது. எது உண்மையான வெற்றி என புரியும் போது தான், வெற்றியை நோக்கிய அணுகுமுறையும் சரியானதாக இருக்கும்.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக