வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

யாரையும் சாரா வாழ்வின் சுகம் ! | வெற்றி

எங்கு எப்பொழுது எந்த வேலை செய்தாலும் யாரேனும் உதவி செய்ய வந்தால், சிறிது பாரம் குறையுமே என ஏங்குகிறது மனம்! 

பிறரை சார்ந்து பழக்கப் பட்ட வாழ்வில் உள்ள தனிச் சுகத்தை, அனைவர் மனமும் அறியும். ஒரு வேலையை யாரையும் சாராமல் முடிக்கும் சுகம் அதை விட சுவாரசியமானது என்பதனை எத்தனை மனங்கள் அறியும்.


பள்ளிக்கு செல்லும் பொழுது தந்தை இரு சக்கர வாகனத்தில் இறக்கி விட்டால் சுகம். இதே , நிலை மாறி , நமக்கு என ஒரு சைக்கிளிலே நாமே பள்ளிக்குச் செல்லும் பொழுது, நம்மை அறியாமல் வளரும் புது நம்பிக்கை , நம் மீது நாம் வளர்க்கும் நம்பிக்கை அல்லவா சுகத்தை தாண்டிய அலாதி சுகம்.  

ஒவ்வொரு நாளும் புது புது அனுபவங்கள். வருவனவற்றை , நமக்கு துணை புரிய யாரும் இல்லையே என நினைத்தால் , கிடைப்பதோ கவலை. இதோ வந்து விட்டது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு என மனம் கூறினால், அமைவதோ , ஒரு நல்ல போராட்டத்தில் கிடைத்த வெற்றி . இந்த வெற்றியின் சுகம், போட்டியில் வெற்றி பெற்ற  சுகம். 

ஒருவரை சார்ந்து வாழும் உயிரை , யாரையும் சாராமல் தனித்து நிற்க பழக்குவது அன்பு குறைவில் அல்ல, அன்பு மிகுதியில். பிறர் சாரா வாழ்வை முடித்த வரை பழகினால் , நம்மை சார்ந்தோருக்கும்  பழக்கினால் , கிடைக்கும் சுகத்தை உணர்ந்துப் பாருங்கள்.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக