செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

முதலாளி ஆக தேவையான அஸ்திவாரம்! | வெற்றி

மற்றவரின் தொழிலில்,  பங்களிப்பது என்பதே சவாலான ஒன்று. முதலாளியாக தொழில் செய்வது என்பது ? உடல் உழைப்போ, 24 மணி நேர தொழில் பத்தியோ , ஒரு நல்ல தொழிலாளியின் தகுதி. அப்பொழுது முதலாளி ஆகும் கனவு? எடுக்க துணியும் மிகப் பெரிய முடிவுகளை சார்ந்தே உள்ளது.

தொழிலும் , வாழ்க்கையும் நேர் கோட்டில் செல்வதில்லை. மேடு பள்ளங்களை தாண்ட, பல இடங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பல தொழில்கள் நஷ்டத்தில் முடிய முக்கிய காரணமே முதலாளியின் முடிவெடுக்க இயலா தன்மையே.

முன் தினம் படித்த அதே கேள்வி பதில்கள் , அடுத்த நாள் தேர்வில் வரும். மனப்பாடமும் , உடல் உழைப்புமே போதும் என்ற கல்வி முறையை பழகி உள்ளோம். பள்ளியில் கணக்கில் புலியாக இருந்தாலும், தொழிலில் அதனை பயன் படுத்த தெரிய வில்லை எனில்?

புஸ்பனுக்கு இட்லி கடை முதலாளி ஆகும் கனவு இருந்தாலும், நன்கு இட்லி சுட தெரிந்தாலும், எத்தனை வாடிக்கையாளர்கள் தினம் கடைக்கு வருகின்றனர். எத்தனை வாடிக்கையாளர்களுக்கு எத்தனை இட்லிகள் சுட வேண்டும் என கணக்கு போட்டு முடிவை எடுக்க தெரிய வில்லை. என்ன செய்தால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்? என பல சரியான முடிவுகளை எடுக்க இயலவில்லை. முதலாளியும் ஆக முடியவில்லை. உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட முடிவு, சூழ்நிலை புரிதலுடன் கூடிய முடிவு, இல்லாவிட்டால் என்ன என்ற காப்பை கொண்ட முடிவு  - இப்படி பட்ட முடிவுகள் எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால்,  , நீங்களும் மிகப் பெரிய முதலாளி தான்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக