ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

பிறருக்குப் புரியும் மொழி! | வெற்றி

அனைவருக்கும் அனைத்தும் புரிந்து விடப் போவது இல்லை. சூழ்நிலைகள் புரிதல் விதத்தை மாற்றும். நாய்க் குட்டிக்கு சொல்லும் பாஷையும் , பூனைக் குட்டிக்கு சொல்லும் பாஷையும் ஒன்றாகாது.  

யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிச் சொல்ல தெரிந்தவர்கள், பல தீர்க்க முடியாது என முடிவு கட்டிய பிரச்சனைகளையும் ஒரு நொடியில் தீர்த்து விட்டு , அடுத்த தீர்வை நோக்கிச் செல்ல பழக்கப் பட்டு இருக்கிறார்கள்.

அலுவலகத்தில், பிரபாகரனும் சாந்தனும் ஒரே விதமான பதவியில் இருந்தனர். இவர்கள் இருவரும் தனக்கு கீழே 10 பேரை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு. இருவருக்கும் சமமான தகுதிகள் இருக்கும். வருட இறுதியில் , நிறுவனம் கொடுத்த பாராட்டு பிரபாகரனுக்கே கிடைத்தது. ஏனெனில்? அவரே, தனக்கு கீழே உள்ள 10 பேரையும் எந்த பாஷையில் அணுகினால் சரியாக வேலை வாங்க இயலும் என புரிந்து இருந்தார். நம் பாஷைக்கு பிறர் பழக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை விட்டொழித்து, பிறருக்கு புரிந்த மொழியில் தொடர்பு கொள்ள பழகுவோம்.

நினைத்ததை சாதிப்போம்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக