செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அவமானம் எந்தன் உறவு ! | வெற்றி

அவமானத்திற்கு பல ரூபங்கள். தினந்தோறும் ஏதோ ஒரு ரூபத்தில் வருவாள். அவள் வரும் கணம், உள்ளம் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கும். என்னை விட்டு சென்று விடு எனத் தவித்தாலும் , 'நீ இவ்வளவு தான் பொறுவாய்' என நினைவூட்டி செல்லவே அடிக்கடி பலர் ரூபத்தில் வருவாள். சந்திரனின் வாழ்க்கை தவிப்புகள் இது. அவமானதை எண்ணி எண்ணி மனக் குமுறலோடு, 'என்னடா வாழ்க்கை இது' என வாழ்பவர்கள் ஏராளம். சந்திரனுக்கும் இதே தவிப்பு தான் . ஆனால் , என்று அவர்  அவமானதை, தன் உறவாக பார்க்க நினைத்தாரோ அன்றே அனைத்தும் மாறியது.

ஒவ்வொரு முறை அவள் வரும் பொழுதும், அவளை தள்ளி விடாமல் , அவள் மீது ஏறி நின்று , உயரத்திற்கு செல்லும் தந்திரத்தை கண்டார். 

ஒரு முறை அவமானம், உயர் அதிகாரி ரூபத்தில் வந்தாள். ' நீ எல்லாம் எதற்கு வேலைக்கு வந்து என் உயிரை வாங்குகிறாய் ?' என சக ஊழியர்கள் முன்பு , சந்திரனின் உயர் அதிகாரி கொடுத்த அவமானம் அது. 

அன்றோ சந்திரன் , அவமானதை வரவேற்தார். இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு , வேலையில் திறம்பிட செய்ய என்னென்ன தேவைகள் என்பதை ஆராய்ந்து , நேரத்தையும் , கவனத்தையும் தனக்கு இருக்கும் குறைகளை கடந்து, முன்னேற  பயன்படுத்தி , திறமையான ஊழியன் என்ற விருதை அதே உயர் அதிகாரியின் கைகளில் வாங்கினார்.

அன்று மட்டும் , அந்த உயர் அதிகாரி சந்திரனுக்கு அவமானத்தை தர வில்லை எனில், இன்று சந்திரன் உயர்த்திருக்க இயலாது. மற்ற சக ஊழியர்களும் ஒருவராக இருந்திருப்பார். உங்களை உயர்த்த வல்லது அவமானம். அதனை உறவாக பார்க்கும் பொழுது , உயரும் தந்திரம் உங்களுக்கு புலப்படும். வாழ்க்கையில் அவமானதை காணும் நொடி , வாய்ப்பாக பாருங்கள். ஏரி மீனை விட , ஆற்று மீன் கம்பீரமானது. பல எதிர்ப்புகளோடு உறவாடும் பொழுது, வாழ்க்கை உயர்கிறது.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக