செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

பிறர்... என்ன நினைத்தால் என்ன? | வெற்றி

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், அனுபவித்து வாழ வேண்டிய தருணங்கள். அதனை இயற்கைக்கு ஒன்றிய ஆரோக்கிய எண்ண அலைகளுடன் முழுமையாக பொருத்தி, வாழும் பொழுது , வாழ்க்கை சுவாரசியம் மிகுகிறது. 

இந்த உன்னத தருணங்களை, பிறர் இவ்வாறு நினைத்தால் என்னாவது , அவ்வாறு நினைத்தால் என்னாவது ... என... அவர் நினைத்தாரோ இல்லையோ!  பிறர் மூலம் நம் சுயம் தற்கொலைக்கு உள்ளாக்கப் படும் பொழுது முழுமையான வாழ்க்கை வாழப் படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

அவரவர்களுக்கு தன்னை பற்றியே முழுமையாக நினைக்க  நேரம் இல்லாத அவசர பயணம். அப்படியே ஒருவரைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இன்னொருவர் மனம் கொண்டிருந்தால் , அவர் நேரத்தை இந்த ஒருவருக்காக வீணடிக்க தயாராகுகிறார்.  நேரத்தை வீணடிக்கும் வெட்டி மனிதர் என அவரைப் பற்றி யோசிக்க , இந்த ஒருவருக்கும்  உரிமை உண்டு அல்லவா? 

இப்படிப்பட்ட மனிதருக்காகவா நம் பொன்னான தருணங்களை , அவர்களைப் போல் நாமும் வீணடிக்க தயாராவது?

சரத்துக்கு சுய தொழில் செய்ய மிக்க ஆர்வம். அதனால் , தன் அரசு பணியை துறந்தார். இதனால் , நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகும் அவர் மனைவிக்கு கூட கவலையோ , பதட்டமோ இல்லை. ஆனால் , உறவுகள் ஒன்று கூடி, சரத்தின் இந்த செயலுக்கு கண் , மூக்கு ,வாய் என அனைத்தும் வைத்து எப்படி எல்லாம் தூற்ற இயலுமோ , அப்படி எல்லாம் தூற்றி பேசின. சரத் எதையும் கண்டு கொள்ள வில்லை.

ஒரு நாள், சரத் தொழிலில் சாதித்து , அந்த நகரத்தில் உள்ள பெரும் பணக்காரரில் ஒருவராக உருவெடுத்தார். அதே உறவுகள் ஒன்று கூடி , இன்று சரத்தை புகழ்ந்து பேசின. இதையும் சரத் கண்டு கொள்ள வில்லை.வாழ்ந்தால் வாழ்த்தும் , தாழ்ந்தால் தூற்றும் உலகம் இது. இந்த உலகம் என்ன நினைக்கும் என கவலைக்   கொள்ளாமல் , நமக்காக நாம்,  என்ன செய்கிறோம்  என்பதனை மட்டும் யோசித்தாலே போதுமானதாக உள்ளது.வாழும் வாழ்க்கையும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும்.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக