செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அனுபவம் எத்தனை வருடங்கள்? | வெற்றி

இன்று பலரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக வைத்துள்ளதே அனுபவம் என்ற ஒரே சொல் தான். எங்கு சென்று வேலை கேட்டாலும் , தங்களுக்கு எத்தனை வருட முன் அனுபவம் ? என்ற கேள்வியே பலரை தாக்கி, கொல்லும் . முதல் வேலை, எப்படி வருட அனுபவத்தை கொடுக்க இயலும்?


சான்றிதழ் பெற்ற வரிகளைப் போல, ' வருட அனுபவங்களை' கணக்கில் கொண்டு , வேலையை கொடுத்து விட்டு, நிறுவனத்திற்கு  சரியாக வேலை செய்ய வில்லை என குறை படும் முதலாளிகள் எத்தனைப் பேர் !

வாழ்க்கை அனுபவத்திற்கு வருடங்கள் உதவுமா? வாழ்ந்த நாட்களின் அனுபவத்தை விட, வாழ்வில் புரிந்த அனுபவமே பெரியது . நாட்களோ , வருடங்களோ பெரியதல்ல. 

வாழ்க்கையே அவ்வாறு என்றால் ? செய்யும் தொழில் ? தொழில் வாழ்க்கையின் தனிப் பட்ட தேவைக்கான ஒரு அங்கம். அதற்கான அனுபவம் நாட்களுக்கான அளவுகோல் அற்றது, இன்னின்ன செய்து, இந்திந்த பின் புலன்களோடு வந்திருந்தால் , தன் நிறுவனத்தின் சரியான அங்கமாக இருப்பார் என யூகிக்க இயலாதது.


எனவே,  வேலைக்குச் செல்பவரும் சரி , வேலை கொடுப்பவரும் சரி , ' எத்தனை வருட  அனுபவம் வேலையில் - என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட , இதுவரை செய்த வேலையில் இருந்து என்ன புரிந்தார்? ' என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்தால், நிறுவனத்தில் பல குறைகளுக்கு காரணமான இடைவெளிகள் குறையும்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக