செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

நம் வீட்டுப் பிள்ளை, சவால்களை சந்திக்கத் தயாரா? | வெற்றி

என் பிள்ளையும் நல்ல கல்லூரியில் பெரியப் படிப்பு படிக்கிறாள், அவளுக்கு என்ன? அறிவான பிள்ளை, பிழைத்துக் கொள்வாள் என மனம் பெருமை கொண்டது அமுதனுக்கு. அமுதனைப் போல, தன் பிள்ளைக்கு அனைத்தும் செய்து கொடுத்தாயிற்று அவர்களும் எட்டா கனியை பறிப்பார்கள் என்ற கனவுகள் இல்லா பெற்றோர் உண்டா?

ஆனாலும் , நல்ல அறிவான பிள்ளைகளும் எளிதாக தற்கொலை முடிவிற்கு தள்ளப் பட முக்கிய காரணமாக உள்ளது- சவால்கள் நம் பிள்ளைகளை அண்ட பள்ளி நிர்வாகமோ , பெற்றோர் நிர்வாகமோ விரும்புவதில்லை. 

வாழ்க்கையே சவால்கள் நிறைந்தது தான் , வரும் சவால்களை இந்திந்த முறைகளில் கையாளு என்ற கற்றல் வழிமுறை பள்ளிகளில் இல்லை. எங்கே சவால் என்ற ஒன்று தன் குழந்தையை புண் படுத்தி விடுமோ என்று, பெற்றோரும் சவால்கள் அற்ற வாழ்வையே பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்புகின்றனர்.

எதிர் பாராமல் வரும் வாழ்க்கை சவால்களை தைரியமாக சமாளிப்பது எப்படி என பிள்ளைகளுக்கு சொல்லித் தர, முதலில் பெற்றோர் தயாராக வேண்டும்.

தன் அணைப்பிலேயே பிள்ளைகளை என்றும் வைத்துக் கொண்டு, மேடு பள்ளம் இல்லா வாழ்க்கையை  என்றும் அவர்களுக்கு தர பெற்றோர் மனம் துடிக்கிறது. உண்மை உலகம் வேறாக உள்ளது. சமுதாயப் பார்வையில்  - நினைத்தது கிடைக்கா தருணங்களும் , காதல் துரோகமும், நம்பிக்கை துரோகமும் , சுய நலமும் , மிக மிக எளிது. பெற்றோரே அணைக்காமல் சுடு சொல் சாடும் தருணங்களும் உண்டு. பெற்றோர் அணைப்பு, ஒவ்வொரு நொடியும் பிள்ளைகளுக்கு கிடைக்க இயலாது. 

சமுதாயதை எதிர் கொள்ளும் மனோ வலிமையை எவ்வாறு இளம் தலை முறை வளர்க்கப் போகிறது என்பது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது. இதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். உணர்ச்சிகரமாக , தவறான முடிவை பிள்ளைகள் எண்ணும் தருணம்  , " என்னைப் புரிந்துக் கொள்ள என் பெற்றோர் உள்ளனர், இந்த சவாலை எதிர்க்கொள்ள மன வலிமையை நான் கொண்டுள்ளேன் " என்ற மாற்று எண்ணம் பிள்ளைகளுக்கு தோன்ற, பெற்றோர் காரணமாக இருக்க வேண்டும். 

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக