ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

மனம் தாங்கா எதிர்காலம் வேண்டவே வேண்டாம் ! | வெற்றி

முப்பாட்டனின்  சராசரி ஆயுட் காலம்  35 ஐ , 40 ஐ தாண்டியதே பெரிது என கேள்விப் பட்ட பொழுது வருந்திய உள்ளம், பெற்றோர் தலைமுறை 70 ஐ தாண்டும் வரத்தை பெற்றுள்ளது என கேட்டபொழுது  மகிழ்ச்சியாக தான் இருந்தது. 

ஆனால், இன்றோ நம் சகோதரர்கள் 40 ஐ தொடும் பொழுதே, 60 வயதில் வர வேண்டிய அனைத்து வியாதிகளுடன் வாழ்வதைப் பார்க்கும் பொழுது , நெஞ்சம் பதைக்கிறது. எப்படியோ , மருத்துவ வளர்ச்சியின் உதவியுடன், சராசரி ஆயுள் 70 ஐ , 80 ஐ தாண்டும் வாய்ப்பை கொண்டு உள்ளோம் என்பது சற்றே ஆறுதல் தான்.

அதே சமயம், பல விதங்களில் , முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டு உள்ள நம் அடுத்த தலைமுறை, 20 வயதிலேயே அனைத்து 60 வயது வியாதிகளையும் கொண்டு உள்ளனர் என அறியும் பொழுது மனம் பதபதைக்கிறது. இதன் விளைவு , " நம் தலை முறை,  அடுத்த தலைமுறையின் இறப்பை நேரில் காணப் போகிறது." என்ற அதிர்ச்சியான ஆராய்ச்சி முடிவு.

இந்த பின்னோக்கிய அவல நிலைக்கு, 

எதனை நோக்கி ஓடுகின்றோம் என யோசிக்க கூட நேரம் இல்லாமல் ஓடுகிறோமே !  வீட்டில் சமைக்க கூட நேரம் இல்லாமல் ஓடுகிறோமே? அதனால்!  இந்த வேளை பசியை எப்படியோ போக்கினால் போதும் என, ரெடி டு குக்கில் ஆரம்பித்து,  நாகரீக மோகத்தால் நாச் சுவைக்கு மதிப்பு கொடுத்து, ரசாயன உணவுகளை, நாம் உண்பது மட்டும் இல்லாமல், நம் பிள்ளைகளும் கொடுக்கிறோமே அது காரணமாக இருக்குமா? 

அல்லது பண மோகத்தால் தொழில் அதிபர்கள் செய்யும் உணவு கலப்படம் காரணமாக இருக்குமா? காகிதத் தாளால் ஆன பணத்திற்கு சமூக அந்தஸ்த்து கூடி விட்டது காரணமாக இருக்குமா? எதனை குறை சொல்ல ? ஒன்றா இரண்டா காரணங்கள் !!

இன்று  விழித்துக் கொண்டு , உணவு பழக்க வழக்கங்களை, முடித்த வரை ஆரோக்கியமாக மாற்றாமல் போனால் , நாளை கண்களில் நீர் வழிய, மனம் தங்கா எதிர்காலத்தை எதிர் கொள்வோம் என்பதில் மாற்று இல்லை .விழித்துக் கொள் மனமே !

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக