ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

அவசர புத்திக்கு கிடைத்த வெகுமதி ! | வெற்றி

எங்கு சென்று எதனை செய்தாலும் அவசர புத்தி தலையிடுகிறது. கோயிலில் பிரசாதம் வாங்குவதில் ஆரம்பித்து... எந்த சூழலிலும், எங்கே கிடைக்காமல் கையை விட்டு போய் விடுமோ என்ற பயம். 



முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்களும் அவசரமாக பார்க்கப் பட்டு, முடிவு  எடுத்து செயலாக்கியப் பின், பல சமயங்களில் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்ற கவலையை ஏற்படுத்துக்கிறது.

திருமணத்திற்கான முடிவு, மருத்துவ முடிவு , வேலைக்கான முடிவு , படிப்பிற்கான முடிவு, நிலம் வாங்கும் முடிவு , இதுப் போன்ற முடிவுகள் நிதானமாக நிறை குறைகளை யோசித்து எடுக்கப் பட வேண்டிய முடிவுகள். இதன் விளைவுகள் வாழ்வையே புரட்டிப் போடும் தன்மை உடையது. 

மணி, பல நாட்களாக  சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு, அவசர அவசரமாக எங்கே வீட்டின் விலை ஏறி விடுமோ என்ற உந்துதலில், சரியாக யோசிக்காமல், அக்கம் பக்கம் விசாரிக்காமல் தன் ஓய்விற்கான வீட்டை வாங்கி விட்டார். இப்பொழுது, ஏதோ கருகிய வாடை அடிக்கடி வருகிறதே என்று வீட்டின் பின்  பால்கனியில் நின்று பார்த்தால் , பிணம் எரிக்கும் இடம் அவர் வீட்டை ஒட்டி இயங்குகிறது. அறிந்தவுடன்  மனம் வெடித்து விட்டது. வருத்தம் தான் கிடைத்த வெகுமதி.




அவசரம் வேண்டா இடத்தில் வேண்டாம் அவசரம். 

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக