வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

உறவு உங்களை காயப் படுத்தியதா? | வெற்றி

பல நாட்கள் ஒன்றாக கூடி குழாவினோம். எனக்கான உறவு அது, அந்த உறவுக்காக நான். இதை தாண்டி எதுவும் பெரிதல்ல. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பொடியென தூளாகி போகும், எங்கள் உறவின் முன்.

ஆனால்...ஓர் சொல், பளீரென வந்தாலும் , இதயம் கனக்கிறது. நம்மவர் தானே என, மனதை தேற்றி முடிப்பதற்குள், அடுத்து ஒரு பளீர் வார்த்தை . 


எத்தனை முறை மனதை தேற்ற? ஆயிரம் அன்பு மனதில் கொட்டி கிடக்கலாம் , கோபம் என்ற ஒரு உணர்ச்சி மீறல் , அனைத்தையும் ஒரு நொடியில் இல்லாமல் அழித்து விடுகிறது.

காயத்திற்கு மருந்தில்லை, நாவினால் சுட்டது, ஆறாத காயம். அன்பினால் பிணைக்கப் பட்ட உறவு இது. கோபம் தனிந்த நிலையில் , மனதார யோசிக்க மனம் வேண்டும். அடுத்த முறை , இதே சூழ்நிலை வராமல் இருக்க, காயத்திற்கு காரணமானவரை அருகில் அமர வைத்து , உரையாடல் செய்ய மனம் வேண்டும். 

போனால் போகட்டும் என விட்டு விட முடியாது. அதுவே , நிரந்தர விரிசலுக்கு காரணமாகி விடும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்ற கேள்வி வரும் முன் , பொறுமையாக அமர்ந்து பேச தயாராக வேண்டும்.

உண்மையான உறவு அனைத்தையும் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யும். இனி, காயப் படுத்த எண்ணாது. அனைத்தையும் மீறி,  உறவின் மனதை மாற்ற முடியவில்லை எனில், இதுதான் 'நடைமுறை உலகம்' என  நம் மனதை மாற்ற முயல வேண்டும். பிறர் மனதை மாற்ற இயலாமல் போகலாம். நம் மனதை மாற்ற இயலாமல் போகுமா?

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக