வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தேடி வருகிறதா தொல்லை ? | வெற்றி

நான் என் வேலையை சிவனே என செய்துக் கொண்டு உள்ளேன். யார் வம்புக்கும் போவது கிடையாது. இருப்பினும் நான் ஒதுங்க ஒதுங்க, தேடி வந்து தொல்லை கொடுப்பவரை விட்டு ஓடுவது சுலபமாக இல்லை. எங்கோ இருந்தால் ஓடி விடலாம். என்னைச் சுற்றிலும் இருந்தால்?

பிறர் கொடுக்கும் தொல்லையில்  இருந்து தப்பித்து ஓட வேண்டும் என எண்ணுவதே , தொல்லைகள் நம்மை துரத்த ஒரு பெரிய காரணமாக அமைந்து விடுகிறது. அவர் எவ்வளவு துரட்டினாலும் ஓடுவார் , துரத்து , என துரத்துபவர்களும் உண்டு. பதில் கூறாமல் ஓடுகிறாரே என துரத்துபவர்களும் உண்டு. எப்படி நினைத்து துரட்டினாலும் தொல்லை என்னவோ நமக்கு தான். 

ஒதுங்கும் இடத்தில் ஒதுங்கி விடலாம். ஆனால், அனைத்து தொல்லைகளில் இருந்தும் ஒதுங்க இயலாது. நம் பொறுப்புகள் உள்ள இடத்தில் ஒதுங்க நினைத்தால் , தொல்லைகள் பெரியதாகும்.

அஜய் ஒரு ஆட்டோ டிரைவர். நாள் முழுதும் வேலைப் பார்த்தால் , ரூ.200 ஓ ரூ.300 ஓ கிடைத்தாலே பெரிய விஷயம். அவர் மனைவி நினைப்பதோ , தன்னை கணவன் என்றும் எங்கும் அழைத்து செல்வது இல்லை என்று. தினமும் வீடு வந்தால் , மனைவி இதைப் பற்றி பேசினாலே  , அஜய்க்கு தொல்லையாக தெரிகிறது. இங்கே, " தொல்லையில் இருந்து அஜய் ஓட நினைத்தால் , அவர் மனைவியின் குமுறல் பல மடங்காக , சூழ்நிலையின் கஷ்டம் அதிகரிக்க தான் செய்யும். "ஒதுங்க கூடா , ஒதுங்க முடியா , தொல்லைகள் என தெரிந்தால், எதுத்து நில்லுங்கள் . காரணத்தை ஆராய்ந்து அமர்ந்து பேசி புரிய வைத்து தொல்லை தரும் விஷயங்களை முடிவிற்கு கொண்டு வாருங்கள்,  

வேண்டும் என்றே பிறர் செய்யும் தொல்லைக்கு, பதிலடியை சரியான இடத்தில் கொடுங்கள். எப்படி அணுகினால் தொல்லையை முடிவிற்கு கொண்டு வர முடியும் என முடிவெடுங்கள். செயலாக்குங்கள். 


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக