ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

நீங்கள் எந்த கதாபாத்திரம் ? | வெற்றி

இவ்வுலகில் உள்ள கதாபாத்திரங்கள் ஏராளம். ஏற்றுள்ள கதாபாத்திரம் உங்களுக்கு பொருத்தமா என்ற யோசனை என்றேனும் வந்ததுண்டா? சினிமாவில், நடிகர்கள் பல கதாபாத்திரங்களின்  நாயகர்கள். 

ஹீரோ செய்யும் கதாபாத்திரம் காமடியனுக்கு பொருந்தாது. ஒரு நல்ல டைரக்டர் அதனை சரியாக உணர்ந்து , யாருக்கு எது சரியோ அதனை சரியாக கொடுத்து அந்த கதாபாத்திரத்தின் முழு திறமையையும் வெளிக் கொண்டு வருவார்.

உங்கள் வாழ்வில் , டைரக்டர் நீங்கள் தான். உங்கள் திறமை எங்கே மேலோங்கி உள்ளது என்பதனை சரியாக கண்டுபிடித்து , அந்த கதாபாத்திரத்தில் நடைப் போட்டீர்கள் எனில், வாழ்வின் பாதை , எதிர் பாராத திருப்பத்தை தரும். 

ராம் ஏற்றுள்ள  கதாபாத்திரம் தொழில் நுட்ப பொறியியலாளர். ஆனால் , அவருக்கு பொருத்தமான கதாபாத்திரம் தொழில் நுட்ப கம்பெனியின் முதலாளி. கிடைத்ததை ஏற்பவர் சாதாரண வாழ்க்கை வாழ்வார். தனக்கு வேண்டியதை விடாப் பிடியாக முயன்று பெறுபவர், முன்னேற்றத்தை நோக்கிய வாழ்க்கை வாழ்வார். 


ஆர்வத்தை தூண்டும், திறமைக்குள் கட்டுப் பட்ட கதாபாத்திரத்தை நீங்கள் ஏற்கும் பொழுது , பேர் பெற்ற பிள்ளையாக, இவ்வுலகம் உங்களை ஏற்கும் வாய்ப்பை பெறுவீர்கள். 


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக