ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஏன் தீயவராக வாழக் கூடாது? | வெற்றி

என்னிடம் அனைத்தும் உள்ளது. வல்லவன் நான் . பணத்தின் அதிபதி நான் . ஒரு எறும்பை நசுக்குவது போல , பிறரை துன்புறுத்தினால் , அவரால் என்ன செய்து விட முடியும்? அனைத்து சுக போகங்களுடன் , இனிதாய் வாழ அல்லவா இப்பிறவி? தவறு செய்தவரை எந்த கடவுள் கண்ணை குத்தியது? 


இல்லை , நல்லவனுக்கு தான் அள்ளி கொடுத்து விட்டதா? நான் ஏன் நால்லவனாக கஷ்டப் பட வேண்டும் . பொதுவான கேள்வி இது.

இதற்கு பதில் ஒன்று தான் . தீய எண்ணங்களை வளர்த்துக் கொண்டு , தீமையை மையமாக கொண்ட காரியங்களை நாட்பட செய்பவர், அவரை அறியாமலேயே , தீமைகள் நிறைந்த சக மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அந்த சூழலிலேயே வாழ்வார்.

அவரின் சூழ்நிலையும் , சுற்றுப் புறமும் , வெளியில் இருந்துப் பார்த்தல் , சொர்க்கம் போல் , காட்சி அளிக்கும். இருப்பினும் , பசுந் தோல் போர்த்திய நரி போன்ற கூட்டமே , அவரை சுற்றி இருக்கும். இவர் பிறருக்கு தீமை நினைத்து , பிறர் பொருள் பறிக்கும் எண்ணம் கொண்டிருப்பது போல் தானே, சுற்றி உள்ள கூட்டத்திற்கும் இருக்கும் .

ஒன்று இரண்டு நல்ல நட்பு வட்டத்தைக் கொண்ட நல்லவனுக்கே , பல துன்பங்கள் என்றால் ? எப்பொழுது நேரம் வரும் கொத்தலாம் என , காத்துக் கொண்டு இருக்கும் விஷப் பாம்புகளுக்கு இடையில் , தானும் ஒரு விஷப் பாம்பாக வாழ்வது எவ்வளவு கடினம் ? ஒருநாள் இவர் விஷம் வலுவிழக்கும் போது , கொத்துவது தவறு, நன்றி விசுவாசத்தோடு இருப்போம் என்றா? இந்தப் பாம்புக் கூட்ட நண்பர்கள் யோசித்துக் கொண்டு இருப்பார்கள்  ?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருமுகம் உண்டு.  தன் மனோ வலிமையுடன் என்றும் நல்லவராகவும், என்றும் தீயவராகவும் இருப்பவர் ஒருசிலரே . பலர் சூழ்நிலை வசத்தால் , தன் தீயப் பண்புகளை மேம்படுத்துகின்றனர். உதாரணமாக , மது அருந்தும் பழக்கம் , தீய உணர்ச்சிகளை தூண்டும் திரைப் படங்களைப் பார்ப்பது , தீய செய்திகளை வாசிப்பது என இப்பழக்கங்கள் மனிதனின் தீய எண்ணங்களை தூண்டி , சாத்தானின் முகத்தை வெளிக் கொண்டு வருகிறது.மனோ வலிமையால் தீயவராக வாழ்பவர் , தன் சுற்றத்தையும் தீயவராக மாற்ற , அனைத்து செயல்களையும் புரிகின்றார். விழிப்பற்ற மனிதன் இத்தீய  வலையில் மாட்டி அழிகின்றான். விழிப்பு என்பது, நல்லவராக வாழ விரும்புகிறோமா ? தீயவராக வாழ விரும்புகிறோமா ? என்ற நம் எண்ண வலிமையில் உள்ளது.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக