ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

புத்திசாலித்தனமான வழிமுறையை தெர்ந்தெடுத்தேனா? | வெற்றி

முருகனுக்கும் , விநாயகருக்கும் கொடுக்கப் பட்ட உலகை சுற்றும் வேலையை போன்று முடிக்கப் பட வேண்டிய வேலைகள் நித்தம் பல. செய்யும் வேலையின் முடிவு தான் எதிர்பார்க்கப் படுகிறதே தவிர, எந்த வழியில் , எவ்வளவு கடினத்தில் முடிக்கப் படுகின்றன என்ற தேவை, நடப்பு உலகில் தேவையற்ற ஒன்றாக உள்ளது.

இவ்வாறு, ஒரு வேலை துவங்குவதற்கு முன், முடிக்க தேவையாக உள்ள பல வழிகளில், எந்த வழி தேர்வு செய்யப் பட இருக்கிறது? கவனத்தில் கொள்ளப் பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது. 

சந்திரனுக்கு ஆதார் எண்ணை பேங்க் அக்கௌன்டில் லிங்க் செய்ய வேண்டும். லைவ் சேட் , மெசேஜ் , தொலைபேசி தொடர்பு, நேரில் சென்று பேங்க்கை அணுகுவது என பல வழிமுறைகள். இதில் எந்த வழி முறை கால விரையம் அற்ற , அதிக பிரச்சனைகளை கொடுக்காத புத்திசாலித்தனமான வழிமுறை என்ற திட்டம் சந்திரன் மனதில் வேலையை ஆரம்பிக்கும் முன்பே தெளிவுடன் இருக்க வேண்டும். 

எந்த வழிமுறை பின் பற்றப் பட்டது, எவ்வளவு கடினப் பட்டார் சந்திரன் என யாரும் கண்டுக் கொள்ளப் போவது இல்லை. வேலையை முடித்தாரா இல்லையா என்ற கேள்வி தான் இங்கு. புத்திசாலிதனமான வழிமுறையை ஒவ்வொரு வேலையையும் முடிக்க கையாளுகிறோமா என்ற  தன்னாய்வு அவசியம். 
சூழ்நிலைக்கு தேவைப்படும் தகுதியை காலத்திற்கு ஏற்ப நித்தம் வளர்த்து வருவது , புத்திசாலித்தனமான வழிமுறையை செயலாக்கம் செய்யும் தகுதியை நமக்கு சரியான நேரத்தில் தரும்.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக