வெள்ளி, 1 செப்டம்பர், 2017

வாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு ! | வெற்றி

எங்கே உதயமாகிறது இந்த வாய் கொழுப்பு ? பிறரை விட நான் பெரியவன் என்ற எண்ணத்தில் உருவாவது தான் இந்த வாய் கொழுப்பு.சிலருக்கோ , தினம் ஒருவரையாவது தன் வாய் வார்த்தையால் காயப் படுத்தா விட்டால் மனம் ஆறாது. தான் என்றும், அனைத்து திறமைகளின் சகலகலா வல்லவன் என்றும் , பிறர் தான் திறமையற்றவர் என்றும், பார்ப்பவரை எல்லாம் தாழ்த்திக் கொண்டே இருப்பர்.

இத்தகையோர் தன் முதுகை திரும்பி பார்க்காதவர் போல் நடிப்பர். தன் குறை வெளியே தெரியாமல் இருக்கவே, என்றும் பிறரை தாழ்த்துவர். இறுதியில் , இதன் விளைவுகள் என்ன?

இவரிடம் கிடைக்கும் இலாப கணக்கிற்காக , என்றும் ஒரு கூட்டம் வால் பிடித்துக் கொண்டு சுற்றும் அல்லவா ? அவர்கள் தான் இவரின் பலம். தான் என்ன பேசினாலும் எதிர் பேச்சு பேச ஆளில்லை, பேசியே சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையை இவருக்கு கொடுப்பவர்கள் இந்த வால் பிடிக்கும் கூட்டம். 

பிறரை புண் படுத்தியே பழக்கப் பட்ட இவரின் வார்த்தைகள், இவருக்கு சுற்றி இருப்பவர்களின்  எதிர்ப்புகளை முதலில் பெற்று தரும்.  இவரைச் சுற்றி இலாபத்திற்காக வாழும் கூட்டமும் , இலாபம் நிறைவு பெறும் நாட்கள் வரும் பொழுது, இவரால் இறந்த காலத்தில் புண்பட்ட தருணங்கள் இருப்பதால், எதிர்ப்புகளை தக்க சமயத்தில் காட்டுவர். வயிற்றுப் பசிக்காக உணவை வாங்கி உண்டு விட்டு , இவரிடம் அடி வாங்கும்  கூட்டம் இது.  பசிக்கு உணவிட்ட புண்ணியம் செய்து இருந்தாலும் , அடித்த பாவமும் அல்லவா கணக்கில் ஏறுகிறது.மீதி இருக்கப் போவது என்ன?  செய்த புண்ணியங்களை தாண்டிய பாவங்கள். சொர்க்கம் கிடைத்திடுமா?

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக