வெள்ளி, 15 செப்டம்பர், 2017

இரு முகத்தில் எம்முகம் நான் ? | வெற்றி

மனிதன் கடவுள் மற்றும் சாத்தானின் கலவை. இரு முகம் கொண்டவன். அவனின் ஒரு முகம் கடவுள் முகம். மறு முகம் சாத்தான் முகம் . அவன் எந்த முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதை சூழ்நிலை நிர்பந்திக்கிறது. அப்பாவிற்கு மாத முதல் நாள் . சம்பளப் பணத்துடன் , இரவு வேலை முடித்து வீடு வருகிறார். 


மகன் அப்பா.. என்று ஓடி வருகிறான் . அவரும் மகனை அணைத்து கொஞ்சுகிறார். மகனுக்கு, அன்று அப்பா கடவுள் முகத்தை காட்டுகிறார்.

மாத இறுதி. முதலாளியிடம் அப்பாவிற்கு ஒரு பெரிய பிரச்சனை. இரவு , மகன், அப்பா... என்று ஆசையாக ஓடி வருகிறான் . இப்பொழுது அவர் , 'சனியனே ! , நகரு ' என கடுமையாக வசை பாடி , அவனை தள்ளி விட்டு செல்கிறார். இன்று, மகன் அப்பாவின் சாத்தான் முகத்தை காண்கிறான் .

இது தான் மனித முகம். எப்பொழுது எம்முகத்தில் இருப்பான் என அவனுக்கே பல நேரம் தெரிவதில்லை . கடவுள் முகத்தை காட்டும் மனிதன் கடவுள் அளவு உயர்கிறான் . சாத்தான் முகத்தை காட்டும் மனிதன் சாத்தான் அளவு தாழ்கிறான். கடவுளின் நட்பு வேண்டுமா? சாத்தானின் நட்பு வேண்டுமா?

யாரிடம் , எம்முகத்தை , எவ்வளவு நேரம் காட்டுகிறான் என்பது , அவனை மட்டும் அன்றி அவன் சூழலையும் சேர்த்து பாதித்து , ஒரு சங்கலி தொடர் போல , பிறர் முகத்தையும் சேர்த்து மாற்றுகிறது.அது மட்டும் அல்ல , கோயிலில் அமர்ந்து கொண்டு , வரும் வழியில் , கசாப்பு கடையை பார்த்தோமே ? எத்தனை கிலோ வாங்கலாம் என நாவில் எச்சை ஊறினால் ? உள் முகம் என்ன ? பிறரின் கண் படாமல் இருந்தாலும் , இந்த முகம் எம்முகம் ? 

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக