செவ்வாய், 26 செப்டம்பர், 2017

உனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம்? ! | வெற்றி

மல்லிகா ஒரு கிராமத்துப் பெண் . படிப்பறிவில்லாதப் பெண் . தனக்கு வரும் கணவர் சென்னையில் வேலையில் இருந்து விட்டால் மட்டும் போதும் என்ற கனவு அவளுக்கு.   மதன் ஒரு சென்னைவாசி. வருமானம் சொற்பமே. வரவுக்கு மீறிய செலவு செய்யாமல் , மல்லிகா குடும்பம் நடத்தினால் போதும் என்ற எதிர்பார்ப்பு மதனுக்கு.

அனைத்துப் பொருத்தங்களும் பார்த்தாயிற்று. தன் கனவை நனவாக்கும் தகுதி, வரப் போகும் துணைக்கு உள்ளதா என்ற அனைத்து ஆராய்ச்சிகளும் முடிந்து விட்டது . கண்டிப்பாக கனவை எதிர் தரப்பு நனவாக்கும் என்ற முழு நம்பிக்கை . படிப்பு, அழகு, தொழில் , பணம் , ஜாதகம் என பொருத்தம் பார்த்து , அதையும் தாண்டி ,  மனப் பொருத்தமும் பார்த்து நடந்த திருமணம் தான் இது.

ஆனாலும் , இருவருக்குள்ளும் பிரிவு. ஏன் ?

ஓசை வர இரண்டு கைகளும் தட்டப் பட வேண்டும் . வாழ்க்கை இனிக்க இரண்டு தரப்பிலும் நேர்மை வேண்டும் . ஒருத்தர் தரப்பில் மட்டும் விட்டுக் கொடுத்தல் , என்ற வேதாந்தம் அந்த காலத்தில் எடுப்பட்டு இருக்கலாம். ஆனால் , இக்காலத்தில் ? பயணத்தின் போது , ஒரு தரப்பில் ஓட்டுனரின் நேர்மை தவறினாலும், சேதாரம் என்னவோ இரண்டு தரப்பிலும் தான். வாழ்க்கைப் பயணமும் இதைப் போன்றதே. கணவர் மனைவிக்கு இடையில் , மனப் பொருத்தத்தை தாண்டிய , நேர்மை தேவை படுகிறது.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக