வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி

ஒரு அழகிய பண்ணை வீட்டில் , இரண்டு குழந்தைகளான அண்ணன் பாலு . தங்கை தாமரை பெற்றோருடன் வாழ்ந்து வந்தனர் . பெற்றோர் வெளியே சென்று இருந்த சமயம்  ,  பாலு வீட்டின் முற்றத்தில் பந்து விளையாடி கொண்டு இருந்தான் . அப்பொழுது , முற்றத்தில் இருந்த சிறிய சிலையை தெரியாமல்  பாலு உடைத்து விட்டான் . 


பயம் மற்றும் பதட்டத்தில் , உடைந்த சிலையை அவசர அவசரமாக தோட்டத்தில் மண்ணைத் தோண்டி பாலு புதைத்தான். இதனை , ஜன்னலின் வழியாக தங்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் . பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் , பாலு எதுவும் கூறவில்லை . தாமரையும் அமைதி காத்தாள். 

அன்று இரவு , தாமரையை துணிகளை மடித்து வைக்க அம்மா அழைத்தார். அவள் பதிலுக்கு , " அண்ணன் இந்த வேலையை செய்ய ஆசைப்  படுகிறார் "  என்கிறாள் . அண்ணனிடம் மெதுவாக , " சிலை நியாபகம் இருக்கிறது அல்லவா?" என வினவினாள் . 

அடித்த நாள் காலை ,தாமரையை , பாத்திரம் கழுவ அம்மா அழைத்த பொழுதும் , " அண்ணன் இந்த வேலையை செய்ய ஆசைப் படுகிறார் "  என்றாள் . அண்ணனிடம் மெதுவாக , " சிலை நியாபகம் இருக்கிறது அல்லவா?" என வினவினாள் . 

தன் தவறை மறைக்க நினைக்கும் பொழுது , தங்கை என்றும் மிரட்டுவாள் என்பதை உணர்ந்த பாலு , தன் அம்மாவிடம் நிகழ்ந்த  அனைத்தையும் கூறி , மன்னிப்பு கேட்டான் . அவரும் மன்னித்து விட்டார்.செய்த தவறுகளை மறைக்க நினைக்கும் பொழுது  , அதுவே நமக்கு பலவீனமாக அமைந்து விடுகிறது. மிரட்டலை சந்திக்க நேரிடுகிறது .

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக