செவ்வாய், 5 செப்டம்பர், 2017

சில காரியங்களை செய்ய முடியவில்லையே ! | வெற்றி

எத்தனையோ காரியங்களை முடித்து விட மனம் ஏங்குகிறது. என்னால் செய்ய இயலாதது எதுவும் இல்லை என, பல சாதனைகள் புரிய மனம் துடிக்கிறது. படத்தில் காணும் சகல கலா வேலையை நிஜத்தில் செய்யும் ஹீரோவாக மாற மனம் துடிக்கிறது. 

ஹீரோவாக இருப்பது இருக்கட்டும் , ஜீரோவாக இருந்திடக் கூடாதே! முடியாத சில விஷயங்கள் வாழ்க்கை பாதையில் இருக்கத்தான் செய்கிறது . உதற இயலவில்லை . அவசியமான தேவையாக இருக்கும் விஷயங்கள் இவை. 

சக ஊழியர் மாதவன். கம்பெனியில் கொடுக்கும் கஸ்டமர் சர்வீஸ் இவருக்கு கை வந்த கலை. டெக்னிக்கள் வேலை ஏதோ தெரியும். இதுவும் நன்றாக தெரிந்தால், அவருக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும். பல முறை முயற்சித்தார். முடியவில்லை. ஆனால் , அதற்காக வருந்த வில்லை அவர். அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு எதிர்ப்பான எண்ணத்தை கொடுப்பது இந்த வருத்தம் என்பதை நன்கு புரிந்திருந்தார். 

சாதித்து காட்டுவேன் என, தகுதிக்கு மீறிய செயலில் இறங்கினால், தனக்கு மன அழுத்தம் தான் மிஞ்சும் என நன்கு உணர்த்திருந்தார். எனவே, முடியாத செயலை சரியான முறையில் மேனேஜ் செய்யும் திறனை நாட்பட வளர்த்தார். நல்ல முன்னேற்றம் இன்று அவருக்கு. யதார்த்த வாழ்க்கையை நன்கு வாழ்த்தாலே போதுமாக உள்ளது . இதுவும் முன்னேற்றம் தானே ?

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக