வெள்ளி, 22 செப்டம்பர், 2017

வாழ்க்கையை வாழ வேண்டிய விதம் ! | வெற்றி

ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வித்தாளை கொடுத்து பதில் எழுத சொன்னார். அது ஒரு வெற்றுத் தாள் . அனைத்து மாணவர்களும் விழித்தனர். அந்த தாளில் என்ன தெரிகிறதோ அதனைப் பற்றி எழுதுங்கள் என்றார் ஆசிரியர். 


விடைத் தாள்களை திருத்தும் பொழுது அனைத்து மாணவர்களின் பதிலும், தாளில் உள்ள ஒரு சிறு கரும் புள்ளியை பார்த்தேன் என்றே இருந்தது . ஆசிரியர் இன்று யாருக்கும் மதிப்பெண்கள் இல்லை என்றார்.

அவர் கூறிய காரணம் இதோ : அந்த தாளில் ஒரே ஒரு சிறு கரும் புள்ளி இருந்தது . தாளின் மற்றப்  பகுதிகள் முழுவதும் வெண்மையாக இருந்தது.  மிகுதியாக இருந்த வெண்மையைப்  பற்றி   நீங்கள் யாரும் எழுத வில்லை . கண்ணுக்கு தெரியுமா இல்லையா என்று இருக்கும் ஒரு சிறு கரும் புள்ளியை பற்றி எழுதி இருந்தீர்கள் .வாழ்க்கையும் இதைப் போன்றதே. அனைத்திலும் முழுமை என்பது உலகில் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு , குறை ஆவது இருக்கத் தான் செய்யும் . கரும் புள்ளியைப் போன்ற , குறையை பார்க்கிறீர்களா ? அல்லது வெண்மையைப் போன்ற , வாழ்க்கை நிறைகளை பார்க்கின்றீர்களா ?

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக