ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

எதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே ! | வெற்றி

கூடைகளில் கீரைக் கட்டுகளுடன்,செண்பகம் 
,தினம் காலை அந்த மாடி வீட்டு அம்மாவிடம்  , " கீரை வேண்டுமா அம்மா ? " என கேட்பது வழக்கம் . " வேண்டாம் " என எதிர் குரல் . ஒரு நாள் , " எத்தனை நாட்கள் வேண்டாம் என தினம் சொல்ல ? " என மாடி வீட்டு அம்மா கடிந்துக் கொண்டார். 

செண்பகம் பொறுமையாக , " கோவிச்சுக்காதம்மா , உங்கள் முகத்தை பார்த்து விட்டு கீரை விற்றால் , அன்றைய வியாபாரம் அமோகமாக நடக்கிறது . அதனால் தான் , தினம் வந்து கேட்க்கிறேன் ." என்றாள் . அடுத்த நொடி, மாடி வீட்டு அம்மா , வேகமாக முக மலர்ச்சியுடம் கீரைக் கட்டுகள்  இரண்டு கொடு என வாங்கிக்  கொண்டார். 

தொழில் செய்யும் இடத்தில், குடும்பத்தில் , நண்பர்கள் வட்டத்தில் , " நான் பலம் குறைந்தவன் . என்னால் என்ன செய்ய இயலும் ? " என நினைப்போர் , மோசமான தருணத்திலும் , பார்த்து காரியத்தில் இறங்கினால் , முடியாததும் முடிந்து விடும் என்பதை செண்பகம் நிரூபித்து விட்டாள்.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக