செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சுதந்திரம் என் உரிமை ! | வெற்றி

எத்தனை நாட்கள் தான் அடுத்தவருக்கே உழைத்திட ? எனக்கென்று ஏதும் வேண்டாமா? அடிமை வாழ்க்கைக்கா பிறவி எடுத்தேன் ? தட்ட தட்ட குனிந்தேன் . சாகும் வரை தட்டுகின்றனரே ! அவரைப் போல தானே நானும் பிறந்தேன். ஏழையாக பிறந்தது என் குற்றமா? ஐயகோ ! ஏழையாக இறந்தால், என் பிழை ஆயிற்றே ? 

மீண்டு வர தவிக்கின்றேன். அதற்கு , கல்வியே , எனக்கு கிடைத்த ஒரே வழி. இன்று, அதிலும் கலப்படமா ?  என் நண்பன் சேற்றில் கை வைத்தால் தானே , மக்களால் சோற்றில்  கை வைக்க இயலும் . அதிலும் , அவஸ்தையா ? ஒரு வேலை உணவாவது , என் உயிர் பிரியாமல் காத்தது! இன்று, ரேஷன் எங்கே? 

வறண்டு போன வாழ்வில் , இன்று ஒட்டி இருப்பது ஒரு சிறு துளி நம்பிக்கை தான் ! ஒரு சிறு தீப்பொறி போதுமே , காட்டையே அழித்து விட. ஒரு துளி நம்பிக்கை போதாதா? என் நாட்டை காத்திட? 

பள்ளம் தான் , உயரத்தை வாழ வைக்கும் . என் மக்களின் உழைப்பே , இன்றைய மேல் வீடுகளின் சொகுசான வாழ்க்கை . இன்று , என் நண்பன் இல்லை எனில் , மேல் வீட்டின் கழிவுகளை அப்புறப்படுத்துவோர் யார்?அவரவர் செய்ய வேண்டியது தான். 
அப்பொழுது, அப்புறப்படுத்திய தன் கைகள் அசுத்தமென, மேல்வீட்டார் தன் கைகளையே வெட்டிக் கொள்வார்களா என்ன ?  

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக