செவ்வாய், 19 செப்டம்பர், 2017

என் மதிப்பு என்ன? | வெற்றி

என் மதிப்பை நான் உணர, 
என் உடலில் உயிர் ஒட்டி உள்ளதே , இது போதாதா? எந்த இயந்திரத்தை வைத்து உருவாக்கினாலும் உருவாக்க இயலாத உடல் எனக்கு , இது போதாதா? பகுத்தறியும் திறன் உள்ளது , இது போதாதா? என் மதிப்பை பற்றிய உணர்வு , என்னை சார்ந்ததே !இது எனக்கு புரியாதா ? 


என் மனம் என்ன நினைக்கிறது ? என்றும் ,மதிப்புடையவன் நான். மனசாட்சியே என் கடவுள். உணர்வுக்கு அடிமை அற்றவன் நான். சரி எது , தவறு எது என பகுத்தறிந்து நல்லதை வல்லமையாக மாற்ற முயற்சிக்கும் திறமை உடையவன் நான். கடமையாற்றும் பண்பாளன் நான். உடலை , உயிரை , பகுத்தறியும் திறனை,  என்றும் வளமுடன் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் திறன் என்னில் உள்ளது . எங்கும் 100 % முழுமை இல்லை. என் தரத்தை உயர்த்துவது தான் என் முழுமை. இதை தாண்டி என்ன வேண்டும் இப்பிறவியில் எனக்கு , என்றே என் மனம் கூறுகின்றது.

சொர்க்கத்தையும் , நரகத்தையும் காண ,நான் வேறுலகம் செல்ல வேண்டும் என்ற கனவு எனக்கெதர்க்கு. என் மூதாதயர்க்கு அவர் மூதாதயர் சொன்னதது. இன்று என் கண்ணில் படுவதென்னவோ , இவ்வுலக சொர்க்கமும் , நரகமும் தான்.இவ்வாழ்வை , என் மதிப்புணர்ந்து, முழுமையாக வாழ தான் போகிறேன். மகிழ்ச்சியுடன், இங்கேயே சொர்க்கத்தை காண தான் போகிறேன் , என்றே என் மனம் கூறுகின்றது.


இப்பிறவியில் என் மதிப்பை நான் உணர்ந்து செயலாற்ற வில்லை என்றால் ,எப்பிறவி எனக்கிதை உணர்த்தப் போகிறது? என்றே என் மனம் கூறுகின்றது.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக