வெள்ளி, 8 செப்டம்பர், 2017

என் உறவை இழக்க இதுவா காரணம்? | வெற்றி

எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவர் தவறிழைத்து விட்டார். இங்கே , எனக்கு தவறிழைக்கப் படுகிறது. ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் மிக மிக நல்லவர்கள். தரையில் லட்ச ரூபாய் பணம் தவறி கிடந்தாலும் , பொருளுக்கு சொந்தக்காரர் வந்து எடுக்கும் வரை யாரும் அதனை தொடக் கூட மாட்டார்கள்.

அத்தனை நல்ல கிராமம். திருட வந்தவன் கூட நல்லவனாக திருந்தி விடுவான் இவர்கள் அரவணைப்பில் . கிராமமா ? சொர்க்கமா ? என கேட்க வேண்டும். 

இப்படி இருந்த கிராமம், ஒரே ஒரு வெளி ஆள் , ஒரு நொடியில் ஏற்பட்ட சுயநல ஆசையால் ,  பணத்தை திருடி விட்டு , அந்த கிராமத்தார் ஒருவரின் மீது சந்தேகப்படும் சூழலை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார். விளைவு : அந்த கிராமம் தான் உலகிலேயே மிக மோசமான கிராமமாக இன்று மாறி விட்டது.

இந்த கதை, ஒரு அழகிய குடும்பத்திற்கும் பொருந்தும் . இரு நல்ல மனித உறவுகளுக்குள்ளும் பொருந்தும் . துரதிஷ்ட வசமாக , மனிதர்களில் சிலர் , தன் சுய லாபத்திற்காக , நல்ல உறவுகளுக்குள் சந்தேகம் என்ற ஒரு சிறிய தீப்பொறியை போட்டு விட்டு, அடுத்த குடும்பத்திற்குள் இதே வேலையை செய்ய கிளம்பி விடுவர் . இது போன்ற உறவுகள் நம் அருகிலேயே மிக நல்லவராக பேசி சகஜமாக இருப்பர். இவர்களை இனம் காண நாட்பட்ட பழகிய அனுபவம் தான் உதவும் . அதற்குள் , உறவுகளை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பிரித்து விட்டு நழுவி சென்று விடுவர். தன்னை அறியாமல், நல்லது செய்கிறேன் என, இந்த வேலைகளை செய்யும் உறவுகளும் உண்டு.

இதற்கு ஒரே தீர்வு . நம்பிக்கை. கயிறை போன்ற நம்பிக்கையும் , இரும்பை போன்ற நம்பிக்கையும் . எந்த நம்பிக்கை சந்தேகம் என்ற தீப் பொறி எளிதில் பற்ற கூடியது ?  

இப்பொழுது உலகம் உள்ள சூழலில் , நல்ல உறவுகளை இரும்பு போன்ற நம்பிக்கை கொண்டு காப்பாற்றினால் கூட , இரும்பை உருக வைக்க , ஒரு புது ரசாயனதை தயாரித்து விடுவர் . பல நாள் பழகிய ஒரு நல்ல உறவை இழக்கும் முன் , பல கோணங்களில் பல நாட்கள் யோசித்தாலும் பரவா இல்லை . ஆனால் , பிறர் கிளப்பிய ஒரு சிறு சந்தேகத்தை மட்டும் காரணமாக வைத்து பிரியாதீர்கள்.  

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக