செவ்வாய், 3 அக்டோபர், 2017

இந்த நிலைமைக்கு... , பொறுப்பு யாருடையது ? | வெற்றி

முகில் என்ற பூனை குட்டிக்கு தெரு ஓரத்தில் வீடு. குப்பைகளிலில், தெருவில், கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்தது . ஆனால் , அதன் மனம் ஏற்க வில்லை. காரில் செல்லும் பூனைகளைப் போல் , தனக்கும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற அபிரிதமான ஆசை. 

தன் நிலைமைக்கு மற்றவர்களை, சமுதாயத்தை  குறை கூறி , கிடைத்தது இது தான் என  வாழ்வது ஒரு பாதை . ஆனால் , யோசித்தது . பணக்கார வீட்டின் செல்ல பூனை குட்டி ஆக என்ன செய்வது ? என யோசித்தது.

தான் இருக்கும் தெரு என்ற சூழ்நிலையை விட்டு வெளிவந்து , பணக்காரர்கள் வந்து செல்லும் இடங்களை நோட்டம் விட்டது. பணக்கார குழந்தைகள் எங்கு இருப்பார்கள் என நோட்டம் விட்டது. பணக்கார வீட்டு பூனை எந்த வகையான பழக்கங்களை வெளியே வரும் பொழுது செய்கின்றன என நோட்டம் விட்டது . 
தன் பழக்கங்களை மாற்றியது.

தன்னம்பிக்கையுடன் பணக்கார வீட்டு குழந்தைகள் விளையாடும் மைதானங்களை தினம் சென்று , தொல்லை கொடுக்காமல் , அதே சமயம் ,அவர்களின் கவனம் தன் மீது படும் படியான செயல்களை செய்தது . ஆறு மாதங்கள் கடந்தன.

இதன் நம்பிக்கை குறைய வில்லை . முயற்சி . முயற்சி . அயராத முயற்சி . கஷ்டத்திலேயே வாழ்க்கை முழுவதும் வாழ்வதை விட , முயற்சியினால் வரும் கஷ்டம் எவ்வளவோ மேல் என நினைத்தது . மேலும் மாதங்கள் கடந்தன. 

ஒருநாள் , இதன் வாழ்வில் மலர்ச்சி. நினைத்தது போலவே , ஒரு குழந்தைக்கு இதனை பிடித்து விட்டது .  இனி என்ன ? முகிலும் காரில் செல்ல , தெரு ஓரம் நின்ற பூனைகளை வேடிக்கை பார்த்தது.

முகில் தன் நிலைமைக்கு தானே பொறுப்பெடுத்தது . அதனால் , சரியான வாழ்க்கை பாதை அதன் கண்களில் பட்டது . ஆனால் , சுற்றத்தையும் , சூழ்நிலைகளையும் குறை கூறி இருந்திருந்தால் , அதன் சக்தி முழுவதும் , குறை கூறவே விரையம் ஆகி இருந்திருக்கும்.

இந்த நொடியில் , என்ன உள்ளதோ அது உள்ளது . நடந்ததை மாற்ற இயலாது . அடுத்தவர் கட்டுப் பாட்டினால் , பல நல்ல நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்காமல் இருந்திருக்கலாம் . ஆனால் . அதே சமயம் , தன் நிலைமைக்கு அடுத்தவரை பொறுப்பேற்க வைப்பதனால் , நம் வாழ்வில் எந்த ஒரு நல்ல மாறுதல்களும் வரப் போவது இல்லை .ஆனால் , குறை கூறுவதை விடும் பொழுது ,நம் சக்தி விரையம் ஆவது தடுக்கப் பட்டு,  இந்த நாள் என்ன முடியும் என்பது கண்களுக்குப் புலப் படும் . வாழ்க்கை திசையை மாற்றும் பாதை புலப்படும் . சக்தி முழுவதும்  நல்ல மாற்றங்களுக்கு  செலவீனம் ஆகும்.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக