ஞாயிறு, 1 அக்டோபர், 2017

உறவை தக்க வைத்துக் கொள்ள அன்பு போதுமா? | வெற்றி

கதிரின் உடன் பிறந்தவர்கள் சந்திராவும் , முருகேசனும் . இவர்களின் தந்தை சாலமன், கிராமத்தில் , ஒரு சைக்கிள் கடை முதலாளி . பெரிய வருமானம் இல்லை எனினும் , வாழ்க்கையை ஓட்ட ஏதோ ஒரு வருமானம் அவருக்கு . தன் பிள்ளைகளை தன்னால் இயன்ற வரை நல்ல நிலைக்கு கொண்டு வர , இயன்ற செலவீனங்கள் செய்து படிக்க வைத்தார். 

சந்திராவின் திருமணத்திற்கு சிங்கப்பூரில் இருக்கும் கதிரும் , சென்னையில் இருக்கும் முருகேசனும் ஒரு வாரம் முன்பே வந்து விட்டனர் . இருவரும் ஏதேனும் பரிசுப் பொருட்களுடன் வருவார்கள் என்ற எதிர் பார்ப்பு சந்திராவிற்கு . கதிர் சிங்கப்பூரில் இருந்தாலும் , அவரின் தினச் செலவுகளுக்கு தான் வருமானம் . சேர்த்து வைத்த சிறிது பணத்தில் இருந்து , ஆசையாக 5000 ரூபாய் பொறுமான ஒரு டிசைனர் சாரியை  வாங்கி வந்தார் . முருகேசன் 10,000 ரூபாய் பொறுமான , ஒரு செல்போன் வாங்கி வந்தார். 

இருவரின் பரிசுப் பொருட்களையும் பார்த்த சந்திரா , முருகேசனுக்கு தன் மீது எத்தனை பாசம் என மகிழ்ந்து புகழ்ந்து தள்ளினார் . ஆனால் , கதிரின் பரிசை கண்டு கொள்ளாத சந்திரா , கதிர் அன்பில்லாத உடன் பிறப்பு என்பதை போல் ஒரு பார்வையை பார்த்து விட்டு சென்று விட்டார்.

என்னதான் , சந்திரா முருகேசனின்  சூழலை புரிந்து , அவர் அன்பாக கொடுத்த பரிசை , மதிப்பு கொடுத்து பாசமாக வாங்கி இருக்க வேண்டும் என்றாலும் , உண்மையான நிகழ் உலக சூழல் கதிரின் அன்பிற்கு மதிப்பை தரவில்லை. முருகேசனைப் போன்று பாசத்துடன் பணத்தையும் சேர்க்கும் பொழுதுதான் அன்பு கப்பாற்றப் படுகிறது. 

உறவை தக்க வைக்க, அன்பு மட்டுமே போதுமானதாக இருக்க வேண்டும் என்றே மனம் ஏங்குகிறது . 

ஆனால் , பணமும் அல்லவா தேவைப் படுகிறது .

அடுத்த தலைமுறை , இதனை உணர்ந்து வளர்ந்தால் , நன்றாக  இருக்கும் .

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக