வெள்ளி, 8 டிசம்பர், 2017

உலகை ஏன் இன்றும் மாற்ற இயலவில்லை ? | வெற்றி

பல வருடங்களுக்கு முன்பு சுள்ளான் என்ற இளைஞர் ஓர் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தார் . சமூக அக்கறை கொண்ட அவர் மனது , எப்படியேனும் இவ்வுலகை மாற்றி விட வேண்டும் என துடித்தது. பெரும் முயற்சியில் ஈடு பட்டார். முடிய வில்லை . இந்த நாட்டையேனும் மாற்றி விட வேண்டும் என பெரும் முயற்சியில் ஈடு பட்டார் .


அதிலும் தோல்வி . தன் மாநிலத்தையேனும் , பின்பு தன் மாவட்டத்தையேனும் , பின்பு தன் கிராமத்தையேனும் , பின்பு தன் குடும்பத்தையேனும் மாற்றி விட வேண்டும் என நினைத்து செய்த, அனைத்து முயற்சிகளும் தோல்விகளிலேயே முடிந்தது .
 
இந்த தோல்விகளிலேயே பல வருடங்கள் கடந்து விட்டன . கடைசியாக தன்னை மாற்றி விடுவது என முடிவெடுத்து , தன்னை , தன் எண்ணங்களை , தன் செயல்களை, உலகை எவ்வாறு மாற்ற வேண்டும் என  நினைத்தாரோ, அவ்வாறே தன்னை முழுவதுமாக மாற்றினார் .
 
இந்த மாற்றத்தின் விளைவாக , அவரின் குடும்பம் மாற, அவரை சுற்றி ஒவ்வொன்றாக அனைத்தும் மாற தொடங்கியது . இந்த முடிவை என்றோ எடுத்திருந்தால் , இன்று பலவற்றை மாற்றி இருக்கலாம் என சுள்ளானுக்கு தோன்றியது .

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக